தில்லியில் திட்டமிட்டு கலவரங்களை உண்டாக்கி இஸ்லாமியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் நடைபெற்று வந்த போராட்டங்களை சீர்குலைத்து தடுத்து நிறுத்தும் நோக்கில் திட்டமிட்டு கலவரங்களை உண்டாக்கி போராட்டக்காரர்களை, குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது கொடுமையான கொலைவெறித் தாக்குதலை அமித்சா கட்டுப்பாட்டில் இயக்கும் டில்லி காவல்துறை மற்றும் ஆர்.எஸ்.எஸ். ரவுடிகளை கொண்டு ஒன்றிய அரசு நடத்தியது. இதனை கண்டிக்கும் விதமாக தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் இன்று (02-02-20) மாலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் கலந்துகொண்டனர். மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கண்டன உரையாற்றினார்.

Leave a Reply