CAA,NPR,NRC -யை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் படைப்பாளிகள் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்!
தோழர் திருமுருகன் காந்தி, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் அமீர், இயக்குநர் மீரா கதிரவன், இயக்குநர் சண்முகம், ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி, ஆவணப்பட இயக்குநர் அமுதன் ஆகியோர் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இன்று பிப்ரவரி 29 சனி காலை 10 மணிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.