ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் சட்டமன்ற தீர்மானத்தை கிடப்பில் போட்டிருக்கும் ஆளுநரை கண்டித்தும் ஏழு தமிழர் விடுதலை கூட்டமைப்பு சார்பாக மதுரை ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.இதில் மே பதினேழு இயக்கத்தோழர்கள் கலந்துகொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து இயக்க தோழர்களும் கைது செய்யப்பட்டு மதுரை ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply