அமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும்! இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே! போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்!

அமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும்! இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே! போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்! – மே பதினேழு இயக்கம்

CAA, NPR மற்றும் NRC-க்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது வண்ணாரப்பேட்டையில் நேற்று (14-2-2020) தமிழக காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதுநாள்வரையில் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் CAA-க்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் ஒரு வன்முறை கூட நடைபெறவில்லை. ஆனால் இந்த போராட்டங்களை வன்முறையாக சித்தரிக்க பாஜக-வும், அதிமுக-வும் முயன்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று தாக்குதலை துவங்கியிருக்கிறார்கள். தாக்குதலுக்குப் பின்பும் இசுலாமியர்கள் அமைதியாகவே தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து போராடி வருகிறார்கள்.

தமிழர்களை மத ரீதியாக பிரித்து, CAA எதிர்ப்பு போராட்டத்தில் இசுலாமியர்களை தனிமைப்படுத்திவிட பாஜக-வும், பாஜகவிற்கு சேவகம் செய்யும் அதிமுக அரசும் முயன்று வருகிறது. எத்தனை மதமாக இருந்தாலும் தமிழர்களை பிரித்தாளும் காவிகளின் சூழ்ச்சி இங்கே பலிக்காது.

ஒட்டுமொத்த தமிழ்நாடும் இசுலாமிய மக்களின் நியாயமான கோரிக்கைகளின் பக்கம் நிற்கிறது என்பதை இனிவரும் காலங்கள் பதிவு செய்யும். CAA, NPR, NRC என்பது இசுலாமியர்களுக்கு மட்டும் எதிரானதல்ல. அது ஒட்டுமொத்த மனிதநேயத்திற்குமே எதிரானது. அனைத்து மதத்தவர்களுக்கும் எதிரானதே.

அனைத்து மக்களுக்கும் சேர்த்துதான் இசுலாமிய மக்கள் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமைதியாகப் போராடும் மக்களுக்கு தோள்கொடுத்து நிற்போம்! இசுலாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்த நினைத்தால் மொத்த தமிழர்களும் இணைந்து நின்று அதிமுக அரசினை வீழ்த்துவோம் என்ற எச்சரிக்கையினை பதிவு செய்வோம்.

தமிழர் விரோத பாஜக-வுடன் கூட்டு சேர்ந்ததற்காக தமிழர்கள் அதிமுக-வையும் தூக்கி எறிந்தார்கள் என்பதை வரலாறு பதிவு செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை.

தமிழக அரசின் அராஜகத்திற்கு எதிராக அனைவரும் நமது குரலை உரத்து எழுப்புவோம்!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply