5ம் வகுப்பு, 8ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு ரத்து – நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!!

நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!!

5ம் வகுப்பு, 8ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. இது மே பதினேழு இயக்கம் மற்றும் பல்வேறு முற்போக்கு இயக்கங்கள், மக்களின் போரட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

ஏழை குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கும் இப்பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று மே பதினேழு இயக்கம் கடந்த வாரம் ஜனவரி 30, 2020 அன்று பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது.

இதேபோல் தமிழ்நாடு முழுதும் பல்வேறு பெரியாரிய, அம்பேத்கரிய, ஜனநாயக இயக்கங்கள் போராட்டம் நடத்தின. முதலில் பொதுத்தேர்வை ரத்து செய்ய முடியாது என்ற சொன்ன அரசு இப்போது நமது குரலுக்கு அடிபணிந்திருக்கிறது.

மக்களின் எதிர்காலத்திற்கு எந்த சிக்கல் என்றாலும் முற்போக்கு இயக்கங்களே களத்தில் நிற்கும். “இந்துக்களே ஒன்று சேருங்கள்” என்று மதவெறியை பரப்பிய எந்த இந்துத்துவ அமைப்புகளும் பாதிக்கப்படப்போகும் இந்து குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வந்து நிற்கவில்லை.

தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கூடாது என்றும், சமஸகிருதத்தில்தான் நடத்த வேண்டும் என்பதற்காக போராடிய, தமிழர் விரோத இந்துத்துவ கும்பல் நம் குழந்தைகளுக்காக ஏன் பேசவில்லை என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். எந்த சாதி அமைப்புகளும் பாதிக்கப்படும் தன் சாதியின் ஏழைக் குழந்தைகளுக்காக போராட வரவில்லை. மதவெறி-சாதிவெறி கும்பலின் அரசியலை புரிந்து கொள்ளுங்கள்.

தமிழர்களே! நம் குழந்தைகளின் எதிர்காலம் காக்க முற்போக்கு இயக்கங்களில் இணைந்து இயக்கங்களை வலுப்படுத்துங்கள்!

மதவெறி-சாதிவெறி அரசியலை புறம்தள்ளுங்கள்.

போராட்டங்களைக் கொண்டாடுவோம்!

– மே பதினேழு இயக்கம்

இயக்கத்தில் இணைய:
9884072010

Leave a Reply