கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டுக்கு அனைவரும் வருக

தமிழர்களின் ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் சாதி எனும் மனநோயை ஒழிக்க பிப் 09’2020 கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டுக்கு அனைவரும் பெருந்திரளாய் கலந்து கொள்ளவேண்டுமாய் அழைப்பு விடுக்கும் விதமாக

வாருங்கள் தோழர்களே!

நீலச்சட்டை பேரணிக்கு
கைகோர்த்து தீயிடுவோம்
ஊர்ச்சேரி பிரிவினைக்கு

பாடல் ஒன்றை மே 17 இயக்க இசைக் குழு உருவாக்கி இருக்கிறது. இதையே அழைப்பாக ஏற்று அனைவரும் கோவையில் அணிதிரள வேண்டுமாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக மே 17 இயக்கம் அழைக்கிறது.

இதனை அனைத்து தோழர்களும் பகிர்ந்து பரப்புமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்

Leave a Reply