தனது அரசியல் சுயநலத்துக்காக இந்தியாவை சர்வதேச மட்டத்தில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் பிஜேபி:

தனது அரசியல் சுயநலத்துக்காக இந்தியாவை சர்வதேச மட்டத்தில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் பிஜேபி:

இந்திய ஒன்றியத்தில் வாழும் 90% மக்கள் எதிர்க்கும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை தனது (இஸ்லாமிய வெறுப்பின் காரணமாக) சுயநல அரசியலுக்காக அமல்படுத்தியே தீருவேன் என்ற் பிஜேபியின் மோடி எதை பற்றியும் கவலைகொள்ளாமல் மூர்க்கத்தனமாக இருக்கிறது.

மோடி அரசின் இந்த மூர்க்கத்தனத்தால் இந்தியாவுக்கு பலவழிகளிலும் நெருக்கடிகள் உருவாகியிருக்கிறது. குறிப்பாக மலேசியா பிரதமர் மகாதீர் பின் முகமது இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளை (57நாடுகள் உள்ளடக்கம்) ஒருங்கினைத்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் சூழலுக்கு மோடி அரசு தள்ளியிருக்கிறது. அடுத்து இந்தியாவிற்கு வருகை தருவதாக இருந்த பங்களாதேஷ், ஜப்பான் அதிபர்கள் தங்களது வருகையை நிறுத்திக்கொண்டுள்ளனர்.

மிகமுக்கியமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடுகள் இந்தியாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நேற்று சனவரி 30.01.2020 தீர்மானம் நிறைவேற்ற இருந்தது. கடைசி நேரத்தில் இந்தியாவின் சார்பில் வருகிற மார்ச் 13ஆம் தேதி பிரதமர் மோடி ஐரோப்பிய யூனியக்கு வருகைதரவுள்ளார். ஆகையால் அதுவரை தீர்மானம் நிறைவேற்றவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க மார்ச் 31’2020வரை தற்போது
அந்த தீர்மானம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதை இந்திய வெளியுறவுத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இந்தியா சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் இதியாவை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்து அடுத்தவேலை தொடங்கிற்று.

அதாவது இந்தியா குடியுரிமை திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் இந்தியா சர்வதேச சமூகத்தின் முன் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட இரண்டு சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது என்பது தான் அது.

1.The International Covenant on Civil and Political Rights
2.International Conventions on Elimination of All Forms of Racial Discrimination (CRED).

இந்த இரண்டு சர்வதேச சட்டங்களிலும் முறையே 1967 & 1979 ஆகிய வருடங்களில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. இந்த இரண்டு சட்டங்களும் மிக தெளிவாக ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லது குடிமக்கள் அல்லாதவர்கள் இவர்கள் யாரும் இனம், மொழி, மதம், பாலினம் நிறம் (இந்தியாவில் சாதி) உள்ளிட்ட எதன் பேரிலும் புறக்கணிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது.மேலும் அந்த நாட்டில் வாழும் யாவரும் சமமாக நடத்தப்படவேண்டும் ( Right To Equality) என்றும் மிகதெளிவாக கூறுகிறது.

ஆனால் இந்தியாவில் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த குடியுரிமை திருத்தச்சட்டம் இந்திய ஒப்புக்கொண்டு கைசாத்திட்ட இந்த இரண்டு சட்டங்களும் எதிராக இருக்கிறது ஆகவே இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படுமென்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (International Human Rights Watch) ஆசிய வழக்கறிஞர் பொறுப்பாளர் ஜான் சிப்டன் அமெரிக்க காங்கிரஸ் சபை கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். பார்க்க இனைப்பு படம்)

பிஜேபி அரசு தனது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியாவை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் சூழலை உருவாக்கிவிட்டார்கள்.இதற்கு மேலும் இந்த தேசபக்தர்கள் ஆளும் கட்சியாக இருந்தால் இந்தியா என்னவாகுமென்று எண்ணிப்பாருங்கள். ஆகவே பிஜேபி அரசை பதவி விலகசெய்யும் காரியத்தை முன்னெடுப்பது ஒன்றே இந்திய ஒன்றியத்தை நேசிக்கும் ஒருவர் செய்யக்கூடிய ஆகச்சிறந்த பணியாகும்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply