5ம் மற்றும் 8ம் வகுப்பு குழந்தைகளுக்கான பொதுத்தேர்வு நடத்தும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முற்றுகை

- in கல்வி, முற்றுகை

5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு குழந்தைகளுக்கான பொதுத்தேர்வு நடத்தும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று 30-1-2020 வியாழன் காலை மே பதினேழு இயக்கத் தோழர்கள் நடத்தினர்.

இதில் பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், இது குழந்தைகள் மீதான வன்முறை என்றும், புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என்றும் முழக்கமிட்டனர்.

தமிழ்நாட்டு ஏழை மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற்றி, குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் முயற்சியை பாஜக அரசின் உத்தரவின் பெயரில் எடப்பாடி அரசு மேற்கொள்வதாக தோழர்கள் குற்றம் சாட்டினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply