மொழிப் போர் இன்னும் முடியவில்லை தமிழர்களே!

மொழிப் போர் இன்னும் முடியவில்லை தமிழர்களே!

அன்னை தமிழை தமிழ்நாட்டில் புறக்கணிக்கும் சதியை முறியடித்த நாள் சனவரி 25 மொழிப்போர் தியாகிகள் நாள். ஆதிக்க இந்தியை எதிர்த்து தமிழர்கள் சமர் புரிந்த நாள் இந்த நாள்.

தமிழ்நாட்டில் தமிழ் கூடாது இந்தியை தான் நீ படிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தும் சட்டத்தை இந்தியா முன்மொழிந்த போது அதை எதிர்த்து அன்னை தமிழுக்கு ஆபத்து என்று நெஞ்சுரத்தோடு தமிழ் அறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும், கருப்புச்சட்டை வீரர்களும் களம் கண்ட நாள் இந்த நாள்.

அனைவரும் ஒற்றுமையுடன் நின்று இந்தி எனும் பேயை விரட்டி அடித்தார்கள். ஆனால் அதை மீண்டும் மீண்டும் தமிழர்கள் தலையில் கட்டியாக வேண்டும் என்று இந்தியம் விட்டபாடில்லை, தமிழர்களின் போராட்டமும் முடிந்தபாடில்லை.

முன்னைவிட இந்தியைத் திணிக்கும் வேலை மிக மும்முரமாக இன்று நடக்கிறது. அதை நம் முன்னோர்கள் முன்னர் எப்படி நெஞ்சுரத்தோடு எதிர்த்து அன்னை தமிழை காத்தார்களோ அதேபோல நாமும் காக்கவேண்டுமென்று இந்நாளில் உறுதி ஏற்போம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply