வேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா? மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா?

வேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா? மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா?

தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியை அழித்து தமிழர்களை அகதிகளாக மாற்றியே தீருவோமென்று பிஜேபியின் மோடி அரசு சபதமெடுத்து வேலைசெய்கிறது. அதனால் தான் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலாமாக அறிவிக்கக்கோரி தமிழர்கள் நாம் போராடினால் பிஜேபி காவிரி தண்ணீர் உரிமையை மறுத்து காவிரி டெல்டாவை ONGCக்கும், தூத்துக்குடியில் அப்பாவி தமிழர்கள் 14பேரை சுட்டுக்கொன்ற வேதாந்தாவுக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த தமிழர்களிடத்திலும் மிகப்பெரிய எதிர்ப்பை உண்டாக்கியிருக்கிற சூழலில்,

இதுபோதாதென்று ஏற்கனவே எரிகிற நெருப்பில் விறகை அள்ளிபோடுவதைப் போல இப்போது இந்த திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட கார்ப்ரேட் கம்பெனிகள் சுற்றுப்புறச்சூழல் அனுமதியும், மக்கள் கருத்து கேட்பும் கேட்கத்தேவையில்லையென்றும் நான்கு நாட்களுக்கு முன்னால் சனவரி 16’2020அன்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பார்க்க படம் 01. அதாவது நேரிடையாக இப்படிச்சொன்னால் மக்கள் மத்தியில் தனது சதி அம்பலமாகுமே என்று மறைமுகமாக ஹட்ரோ கார்பன் போன்ற அதிக செலவுள்ள சுற்றுபுறச்சூழலை கெடுக்கும் திட்டங்கள் அனைத்தும் ’ A’ கிரேட்க்குள் இருந்தது. இதனை தற்போது வெளியிட்டிருக்கிறதிருத்தப்பட்ட ஆவணத்தில் தரை (ON SHORE) மற்றும் கடல் (OFFSHORE) திட்டங்கள் இனிமேல் ‘B2’ என்கிற அதிக பாதிப்பில்லாத சின்ன திட்டங்கள் இடம் பெறும் கிரேட்டுக்கு மாற்றியிருக்கிறது மத்திய மோடி அரசு. இதன் மூலம் இனி ஹைட்ரோ கார்பன் மீத்தேன் எண்ணெய் எடுத்தல் போன்ற திட்டங்களுக்கு சுற்றுப்புறச்சுழல் அனுமதியும், மக்கள் கருத்து கேட்பும் தேவையில்லை என்ற மத்திய அரசின் சதி நிறைவேறியிருக்கிறது. https://cdn.thewire.in/…/Amendment-Notification-Hydrocarbon…

இதைவிட கொடுமை இந்த அறிக்கையை மத்திய அரசு யாரைக்கேட்டுக்கொண்டு வெளியிட்டது என்பது தான். அது வேறு யாருமில்லை! தூத்துக்குடியில் 14 பேர் துள்ளத்துடிக்க சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு காரணமான வேதாந்தாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டுதான் இந்த வேலையை மோடி அரசு செய்திருக்கிறது. அதாவது கடந்த வருடம் ஏப்ரல் 04,2019 அன்று மத்திய அரசுக்கு வேதாந்தா நிறுவனம் சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில் வேதாந்தா நிறுவனம் எங்களுக்கு நாகப்பட்டினம் காரைக்கால் பகுதிகளைச் சுற்றி ஹட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கிடைத்திருக்கிறது. ஆகவே எங்களுக்கு 2006 சட்டத்திலுள்ள சுற்றுபுறச்சுழல் அனுமதி வாங்குவது மற்றும் மக்கள் கருத்து கேட்பு என்ற இரண்டு விதிகளையும் மாற்றித்தரவேண்டுமென்று கேட்டு எழுதியிருந்தது. பார்க்க படம்02 https://cdn.thewire.in/…/Vedanta-Part-2-Cover-Letter-4-Apri…

இந்த கட்டளையை ஏற்றுத்தான் நான்கு நாட்களுக்கு முன்னால் மோடி இனி ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு சுற்றுபுறச்சூழல் அனுமதியும், மக்களிடம் கருத்து கேட்கவும் தேவையில்லை என்று ஒரு கார்ப்பரேட் முதலாளிக்காக 7.5 கோடி தமிழர்களின் வாழ்வை சூனியமாக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

மோடி அரசின் இந்த தமிழின துரோகத்தை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க கூடாது. தமிழர்கள் என்ன மோடி அரசின் பலி ஆடுகளா?

மே17இயக்கம்
9884072010

Leave a Reply