அனைவருக்கும் மே 17 இயக்கத்தின் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

வருடம் முழுவதும் அளவில்லாமல் அள்ளிக் கொடுக்கும் இயற்கையை நன்றிப் பெருக்கோடு நினைக்கும் தமிழர்களின் பண்பாட்டு திருவிழா தான் உழவர் திருநாள்.

இத்திருநாளில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இயற்கையை காக்கவும், விவசாய பெருங்குடி மக்களுக்கு ஆதரவாக இருப்பது என்பதுவே இந்நாளின் சிறப்பாக இருக்கமுடியும்.

விவசாய நிலங்களை தொழில்துறைக்கு தாரைவார்க்கும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றும் காலச் சூழ்நிலையில், விவசாயிகளுக்கான மானியங்களை சுமையாகக் கருதும் அரசுகள் இருக்கும் சூழ்நிலையில், தமிழர்களின் பொங்கல் திருவிழாவை சங்கராந்தி என்கிற பெயரில் திசைமாற்றும் பண்பாட்டு படையெடுப்பு நிகழும் சூழ்நிலையில் இதையெல்லாம் களைந்து விவசாயத்தையும் இயற்கையையும்,நம் பண்பாட்டையும் காக்கும் உறுதியை இந்நாளில் ஏற்போம்.

அனைவருக்கும் மே 17 இயக்கத்தின் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

மே17இயக்கம்
9884072010

Leave a Reply