டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளை தடை செய்!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளை தடை செய்! – மே பதினேழு இயக்கம்

கடந்த 4-1-2020 சனி அன்று இரவு பயங்கர ஆயுதங்களுடன் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த பயங்கரவாத கும்பல் விடுதிக்குள் நுழைந்து மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

மாணவர்கள் டெல்லி காவல்துறையினரை தொடர்பு கொண்டு சொன்ன போதும் அவர்கள் விரைவான நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான ABVP அமைப்பைச் சேர்ந்தவர்கள் இத்தாக்குதலை நடத்தியாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்துத்துவ வாட்சப் குழுக்களின் வழியாக இத்தாக்குதலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. கல்லூரிகளையும், மாணவர்களையும் தாக்கி வன்முறையை விதைக்க முயலும் இந்துத்துவ அமைப்புகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும்.

மாணவர்களால் குற்றம் சாட்டப்படும் ABVP என்ற அமைப்பு இந்தியாவின் எந்த கல்லூரிகளுக்குள்ளும் இயங்குவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. கல்லூரிகள் வன்முறைக் கூடங்களாய் மாறுவதைத் தடுத்திட ABVP அமைப்பினை உடனடியாக கல்லூரி வளாகங்களில் தடை செய்திட வேண்டும்.

இந்த நாட்டின் மிக முக்கியமான நிபுணர்களையும், தலைவர்களையும் உருவாக்கும் ஜேஎன்யூ பல்கலைக்கழகம், பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர்கள் மீது வழக்கு போட்டு டெல்லி காவல்துறை பாஜக-விற்கு தனது விசுவாசத்தை காட்டியிருக்கிறது.

இந்து ரக்சா தள் என்ற அமைப்பு தற்போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக திமிருடன் பேசியிருக்கிறது. இத்தகைய பயங்கரவாத சக்திகள் நாட்டில் இயங்குவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. உடனடியாக தடை செய்யப்பட்டு அந்த அமைப்புடன் தொடர்பிலிருக்கும் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இத்தகைய பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை வளர்த்துவிடும் வேலையை செய்கிற பாஜக அரசு பதவியை விட்டு வெளியேற வேண்டும். அமைதியான நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் வன்முறை மிக அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்த வன்முறைகளுக்கு காரணமான மோடி அரசு பதவி விலக வேண்டும்.

தமிழக அரசு தமிழ்நாட்டில் ABVP அமைப்பினை தடை செய்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாய் நிற்க வேண்டும். அத்தனை வன்முறைகளுக்கும் துணைபோகும் பாஜக கட்சியிலிருந்தும், ஆர்.எஸ்.எஸ் அமைபபிலிருந்தும் தமிழர்கள் அனைவரும் வெளியேற வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply