அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் இன்று ஈரான் ராணுவத்தின் குத்ஸ் பிரிவு தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டிருக்கிறார்

அமெரிக்காவின் விமானத் தாக்குதலில்இன்று ஈரான் ராணுவத்தின் குத்ஸ் பிரிவு தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டிருக்கிறார்.

https://www.aljazeera.com/…/iraq-3-katyusha-rockets-fired-b…

கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க விமானபடை ஈராக்கில் நடத்திய தாக்குதலில் 25பேர் கொல்லப்பட்டனர்.இதனை கண்டிக்கும் விதமாக ஈராகிலுள்ள அமெரிக்க தூதரகத்தை சிலர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களால் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின்னால் ஈரான் தான் இருக்கிறது என்று அமெரிக்க குற்றஞ்சாட்டியதுடன் இதற்கு கடும் விளைவுகளை ஈரான் சந்திக்குமென்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை செய்திருந்தார்.ஆனால் இதனை ஈரான் மறுத்தது. நாங்கள் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என்று திட்டவட்டமாக மறுத்து வந்தது.

இந்நிலையில் ஈராக்கில் நடைபெற்ற அமெரிக்க தூதுரக தாக்குதல் குறித்தும், அதில் ஈரானை அமெரிக்கா குற்றஞ்சாட்டுவதும் குறித்தும் உண்மை அறிய இன்று (03.01.2020) காலை ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு வந்தார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் அமெரிக்க விமானப்படை ஈரான் இராணுவ தளபதியை குறிவைத்து நடத்திய தாக்குதில், ஈரான் இராணுவ தளபதி உள்ளிட்ட 6பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இந்த கொலை மத்திய கிழக்காசியாவில் மிகப்பெரியளவுக்கு பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த பதட்டம் ஏதோ மத்திய கிழக்கில் மட்டும் இருக்காது இது ஆசியாவைத்தான் பெரும் பதட்டத்தும் பாதிப்புக்கும் உள்ளாக்கும். ஏற்கனவே பொருளாதார மந்தநிலையில் தட்டு தடுமாறிக்கொண்டிருக்கும் இந்தியா மத்திய கிழக்கில் நடக்கும் இந்த பதட்டத்தினால் எண்ணெய் விலை கடுமையாக உயரும் பட்சத்தில் இங்கு பொருளாதார பாதிப்பு என்பது மிகக் கடுமையாக இருக்கும்.

2020புதிய வருட தொடக்கம் அமெரிக்கா ஈரான் இடையேயான பதட்டத்தோடு ஆரம்பத்திருக்கிறது. இது எந்தளவு ஆசியாவை பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply