முதலாளித்துவ எதிர்ப்பினை எளிய முறையில் எளிய மக்களிடம் எடுத்துரைத்த போராளி நம்மாழ்வாரின் நினைவைப் போற்றுவோம்! தற்சார்பு பொருளாதாரத்தினைக் கொண்ட தமிழ்நாட்டை உருவாக்க உழைத்திடுவோம்!

முதலாளித்துவ எதிர்ப்பினை எளிய முறையில் எளிய மக்களிடம் எடுத்துரைத்த போராளி நம்மாழ்வாரின் நினைவைப் போற்றுவோம்! தற்சார்பு பொருளாதாரத்தினைக் கொண்ட தமிழ்நாட்டை உருவாக்க உழைத்திடுவோம்! – மே பதினேழு இயக்கம்

இயற்கை வேளாண் போராளி நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாள் இன்று!

வேளாண்மை, மருத்துவம், வாழ்வியல் என அனைத்திலும் ஏகாதிபத்தியத்தின் கோரப் பிடி எத்தகையதாக இருக்கிறது என்பதை கடைக்கோடி விவசாயிகளிடம் கொண்டு சேர்த்ததில் ஐயாவின் பங்கு முதன்மையானது.

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக, தன் இறுதி மூச்சு வரை களத்தில் நின்று பிரச்சாரம் செய்து, போராடிய ஐயா நம்மாழ்வாரின் நினைவை ஏந்தி போராட்டத்தில் நிற்போம்.

தற்சார்பு தமிழ்நாட்டினை உருவாக்கிட உழைத்திடுவோம்!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply