பெரியாரின் 46ஆவது நினைவு நாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம் – பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சி

24.12.19 அன்று பெரியாரின் 46ஆவது நினைவு நாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் பெரியார் திடலில் சிறப்பு கருத்தரங்கமும், பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த வருடம் பெரியார் விருது மூவருக்கு வழங்கப்பட்டது. அதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியும் ஒருவர். இந்த விருதினை தோழர் திருமுருகன் காந்திக்கு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்வில் பெரியாரின் பொதுவுடைமை சிந்தனைகள் என்ற தொகுப்பு நூல் இந்திய பொதுவுடைமை கட்சியின் தமிழ் மாநில தலைவர் இரா. முத்தரசன் அவர்களால் வெளியிடப்பட்டது. நூலை திராவிட இயக்க பற்றாளரும் சிறந்த பொருளாதார அறிஞருமான நாகநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். மேலும் பெரியாரின் 12 தமிழ் நூல்கள் மலையாள மொழியில் திரு.லால் சலாம் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு அதனை ஆசிரியர் வீரமணி வெளியிட்டார்கள்.

நிகழ்ச்சி திராவிடர் கழகத்தின் அய்யா கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களின் வரவேற்புரையோடு தொடங்கப்பட்டு, பெரியார் விருது பெற்ற மூவரின் ஏற்புரையோடு நடந்தது. இறுதியில் திராவிடக்கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் தலைமையுரையோடு நிறைவுற்றது. நிகழ்ச்சியை திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் அணித்தலைவர் பிரின்ஸ் என்னாராசு பெரியார் தொகுத்து வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மே 17 இயகக்த்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் லேனாகுமார் உள்ளிட்ட பெருந்திரளான தோழர்களும், ஏராளமான கருஞ்சட்டை தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

பெரியார் விருதினை பெற்றுக்கொண்ட மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றிய காணொளி

 

Leave a Reply