பொய் புளுகு பேசுபவர்களே நிரம்பிய ஒரு கட்சி

கட்சியில் பொய் பேசுபவர்கள் இருக்கலாம். ஆனால் பொய் புளுகு பேசுபவர்களே நிரம்பிய ஒரு கட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இதோ

கடந்த ஞாயிற்றுகிழமை டெல்லியில் பேசிய பிரதமர் மோடி வாய்க்கு வந்ததையெல்லாம் அள்ளிவிட்டிருக்கிறார். உதாரணத்திற்கு சில

1 தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்து நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் எங்கும் அரசு மட்டத்தில் விவாதிக்கவே இல்லை.

2.முகாம்கள் (Detention Centre) எங்கள் ஆட்சியில் அமைக்கப்படவே இல்லை.

இப்படி சில பொய்களை அள்ளிவிட்டிருக்கிறார். இதை பொய் என்று பிஜேபி எம்பிகளே தற்போது பேசியிருக்கின்றனர். பிஜேபியின் முரளிதரராவ் நேற்று பாசிச இந்து பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் எங்கள் தேர்தல் அறிக்கையையிலேயே நாங்கள் தெளிவாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டுவரவோமென்று குறிப்பிட்டிருக்கிறோம் என்றும் ஒருபடி மேலே போய் பிரதமர் மோடி ஞாயிற்று கிழமை NRC குறித்து எங்குமே பேசவில்லை என்று பொய் சொல்வதில் மோடிக்கே கடும் நெருக்கடி கொடுத்தார் பார்க்க படம்01.

இராண்டாவது கடந்த நவம்பர் 19 அன்று மக்களவையில் அசாம் எம்பி ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் நித்யானந்த் ராய் அசாமில் 6 தடுப்பு முகாம்கள் இருக்கிறது என்று மக்களவையிலேயே அறிவித்திருக்கிறார். அதுபோக டிசம்பர் 11,2019 கேள்வி ஒன்று பதிலளித்த மத்திய இணை அமைச்சர் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தங்களது சொந்த செலவில் சட்டவிரோத குடிகளுக்கு தடுப்பு முகாம்களை கட்டவேண்டுமென்று 09.01.2019 அன்றே அறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார். பார்க்க படம் 02.

இப்படி நாட்டின் உயர்பதவியில் பிரதமரே நாட்டு மக்களுக்கு பொய்யான தகவலை தரலாமா? பிஜேபி கட்சிக்குள் ஒ.பி.சி மக்களை ஏமாற்றியதை போல நாட்டு மக்கள் அனைவரையும் ஏமாற்றி விடலாமென்று மோடி நினைக்கிறாரா?

Leave a Reply