மேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு

மேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடிய தோழர் நாகை. திருவள்ளுவன், தோழர் வெண்மணி உள்ளிட்ட 24 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோவை மற்றும் சேலம் சிறைச்சாலைகளில் அடைக்கப்படிருந்தனர். அவர்களில் தோழர் நாகை. திருவள்ளுவன் தவிர்த்த ஏனைய தோழர்கள் நீதிமன்ற பிணையின் மூலம் இன்று 7-12-2019 விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையடைந்த தோழர்களை கோவை மற்றும் சேலம் சிறைக்கு சென்று மே 17 இயக்கத் தோழர்கள் விடுதலை முழக்கமிட்டு வரவேற்றனர். பின்னர் விடுதலையான தோழர்கள் பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

Leave a Reply