தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்

தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் அங்கிருக்கும் சாதாரண ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மே பதினேழு இயக்கத் தோழர்கள் சந்தித்தனர்.

கிட்டத்தட்ட 200 குடும்பங்கள், 600 க்கும் மேற்பட்ட மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளனர்.

திசம்பர் 1 அன்று ஆரம்பித்த தொடர் மழை காரணமாக வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 4 நாட்களாக மக்கள் அருகில் உள்ள சாலையோரத்தில் தான் உறங்கி வருகின்றனர். குழந்தைகள் உள்பட.

திசம்பர் 2 அன்று மட்டும் அரசு சார்பில் உணவு வழங்கியுள்ளனர். அதன் பின் 3 நாட்கள் மக்கள் வழியில் செல்லும் பொதுமக்களிடம் உதவி கேட்டும், தங்களிடம் உள்ள குறைந்த அளவிலான பணத்தை வைத்தும் ஒரு நேர உணவு சாப்பிட்டு வருகின்றனர்.

இன்னும் வீடுகளை சுற்றியும், வீடுகளுக்கு உள்ளேயும் நீர் சூழ்ந்துள்ளது.

உணவு, உறைவிடம், தேவையாக உள்ளது அம்மக்களுக்கு.

தோழர்கள் மூலம் உடனடி உதவியாக அங்குள்ள மக்களின் குடும்பத்திற்கு தலா 2 கிலோ அரிசி வழங்கப்பட்டது. மேலும் தற்போதைய சூழல் குறித்தும், தேவைப்படுகின்ற உதவிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

அங்கிருக்கும் தற்போதைய சூழல்:

1.அங்கே ஒரு வாரமாக மின்சாரம் இல்லாமல் உள்ளது.

2. குழந்தைகள், முதியோர்களுக்கு அடிப்படை மருத்துவ சேவை தேவைப்படுகிறது.

3.உணவுப்பொருட்கள் தேவைப்படுகிறது.

4.குடிசைகள் மாற்றவேண்டியுள்ளது. அல்லது தார்பாய் போன்ற மாற்று தேவையுள்ளது.

வாய்ப்புள்ளவர்கள் தொடர்பு கொண்டு அளிக்கலாம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply