9 வருடங்களில் 75,000 மாணவர்கள் தற்கொலை. அதிரிச்சியளிக்கும் புள்ளிவிபரம்: அரசின் கடமை படிக்க வைப்பதா? சாகடிப்பதா?

9 வருடங்களில் 75,000 மாணவர்கள் தற்கொலை. அதிரிச்சியளிக்கும் புள்ளிவிபரம்:
அரசின் கடமை படிக்க வைப்பதா? சாகடிப்பதா?

நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக எம்.பி (யாரென்று தெரியவில்லை) ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கடந்த 2007ல் இருந்து 2016 வரை இந்தியாவில் 75,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்றும் அதற்கு முக்கிய காரணமாக பள்ளி கல்லூரிகள் மற்றும் பெற்றோர்களின் அதிகப்படியான அழுத்தமும், சாதி மத ரீதியான ஒடுக்கு முறைகளுமே இந்த முடிவுக்கு முக்கிய காரணமென்று மனிதவள மேம்பாட்டுத்துறையே ஒத்துக்கொண்டிருக்கிறது.

அதில் 2016இல் மட்டும் 9,474பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.அதாவது நாளொன்றுக்கு 26 மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடாக இந்தியா இருக்கிறது.

அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா (1,350) மேற்கு வங்காளம் (1,147) அடுத்து தமிழ்நாடு (981) மாணவர் தற்கொலையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இப்படி ஒரு சூழலை வைத்துக் கொண்டு புதிய கல்விக் கொள்கை என்றும் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்றும் கொண்டுவருவது மாணவர்களை சவக்குழி கொள்வதற்காகத்தான் என்பதை மத்திய அரசின் புள்ளி விவரங்களை பார்த்தாலே புரிந்து கொள்ளமுடியும்.

Leave a Reply