கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி ஆவதற்கு தமிழ் தேவையில்லையாம். இது தமிழ்நாடா? இல்லை வட இந்தியாவின் அடிமை தேசமா?

இந்த கொடுமையை கேளீரோ!

கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி ஆவதற்கு தமிழ் தேவையில்லையாம். இது தமிழ்நாடா? இல்லை வட இந்தியாவின் அடிமை தேசமா?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும். அந்தந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளில் வழக்காட அனுமதிக்கவேண்டுமென்று இந்தியவெங்கும் இருக்கிற பல்வேறு மாநிலங்கள் போராடிக்கொண்டிருகிற நேரத்தில் அதை கொஞ்சமும் மதிக்காமல் மத்திய அரசு இந்தி மொழியை மட்டும் திணிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

இந்திய அரசின் இந்த மொழி திணிப்புக்கு மாநிலத்தில் கங்காணி வேலை பார்க்கும் சில மாநில கட்சிகள் தொடர்ந்து உதவியும் வருகின்றது. அந்த விதத்தில் தான் தமிழகமெங்கும் இருக்கிற கீழ்மை நீதிமன்றங்களில் நீதிபதி ஆவதற்கு தமிழ் கட்டாயம் என்று இருந்த விதியை கடந்த ஆண்டு பிஜேபியின் பினாமி அரசான அதிமுக அரசு மாற்றியது. இதன் அடிப்படையில் நாளை 24.11.19 ஞாயிறு அன்று கீழ்மை நீதிமன்ற நீதிபதிகளுக்கான தேர்வு நடைபெறவிருக்கிறது. இதில் தமிழே தெரியாதவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்ற கொடுமை அரங்கேறவிருக்கிறது.

ஏற்கனவே தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்களில் மண்ணின் மைந்தர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். அதற்கு எதிராக தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கிற வேலையில் வெந்த புண்ணில் வேளை பாய்ச்சும் விதமாக இந்த அறிவிப்பு என்பது மேலும் தமிழர்களை கொதிப்படையச் செய்கிறது. ஆகவே தமிழ்நாட்டில் மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை என்பது மற்ற வேலைவாய்ப்பைகளை போல நீதிபதி பதவிக்கும் பொருந்தும் என்பதை கருத்தில்கொண்டு தமிழக அரசு நாளை நடைபெறவிருக்கிற தேர்வை உடனடியாக இரத்து செய்து, தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே நீதிபதியாகும்படி மீண்டும் சட்டவிதியில் திருத்தம் செய்திடல் வேண்டும். இல்லையேல் தமிழக அரசின் இந்த தமிழர் விரோத போக்கை மக்களிடத்திலே அம்பலப்படுத்தும் வேலையினை மே17இயக்கம் செய்யுமென்று எச்சரிக்கை விடுக்கின்றோம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply