தீவிரவாத நிறுவனங்களிடமிருந்து 20கோடி வாங்கிய பிஜேபியின் தேசவிரோதம் அம்பலம்

தீவிரவாத நிறுவனங்களிடமிருந்து 20கோடி வாங்கிய பிஜேபியின் தேசவிரோதம் அம்பலம்

1993 மும்பை குண்டுவெடிப்பில் மூளையாக செயலாற்றிய தீவிரவாதி தாவூத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளர் இக்பால் மேமன் என்ற இக்பால் மிர்ச்சி. இவருடன் பண பரிவர்த்தனை நடத்தும் நிறுவனமென்று அமலாக்கத்துறை கடந்த 2003ஆண்டு ஆர்.கே.டபிள்யு என்ற நிறுவனத்தை விசாரித்தது.அதன் நிறுவனரை கைதும் செய்தது. அந்த நிறுவனத்திடமிருந்து தான் பிஜேபி கடந்த 2014-2015ஆம் ஆண்டில் தேர்தல் நிதியாக 10கோடி ரூபாய் வாங்கியிருக்கிறது.

அதேபோல இக்பால் மேமனுக்கு வணிக தொடர்பு ஏற்படுத்தி தரும் வேலையை இருவர் செய்திருக்கிறார்கள். ஒருவர் ரஞ்சித் பிந்த்ரா இன்னொருவர் பிளாசிட் ஜேக்கப் இவர்களை அமலாக்கத்துறை ’ஏஜெண்ட்’ என்றே மும்பை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களின் நிறுவனங்களான ஸ்கில் ரியல் எஸ்டேட் மற்றும் தர்ஷ்ன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களிடமிருந்து 2016-17 ஆண்டுகளில் முறையே 2 கோடிரூபாயும் மற்றும் 7கோடியே 50லட்சம் பணமும் தேர்தல் நன்கொடை என்ற அளவில் பிஜேபி வாங்கியிருக்கிறது.

ஆக மொத்தம் தீவிரவாத தொடர்புடைய நிறுவனங்கள் என்று அமலாக்கத்துறையால் கைது மற்றும் விசாரணை வளையத்துக்குள் இருக்கும் நபர்களின் நிறுவனங்களிடமிருந்து சுமார் 20கோடி ரூபாயை பிஜேபி தேர்தல் நன்கொடையாக வாங்கியிருக்கிறது. இவையாவும் பிஜேபியின் அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிற அறிக்கையில் இருப்பவை.

இப்படிப்பட்ட பிஜேபிதான் தீவிரவாதத்தை ஒழிக்க 500 மற்றும் 1000ரூபாய் நோட்டுகளை ஒழிக்கிறோமென்று சொல்லி நாளும் தேசபக்தி பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமென்றால் ஒழிக்க வேண்டியது ரூபாய் நோட்டுகளையா மக்களே?

https://thewire.in/politics/bjp-donations-companies-terror-funding-iqbal-mirchi

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply