பாபர் மசூதி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி குறித்தான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி 21-11-2019 வியாழன் அன்று சென்னை சேப்பாக்கத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தோழர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றினார்.

பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஒட்டுமொத்த நாட்டிற்கும் பாசிச எதிர்ப்பில் தமிழ்நாடு வழிகாட்டிக் கொண்டிருப்பதாக தலைவர்கள் பேசினர்.

இந்துக்களுடைய ஒட்டுமொத்த பிரதிநிதி பாஜக காரன் கிடையாது!
– பாபர் மசூதி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமுருகன் காந்தி

 

Leave a Reply