விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்களை இழிவுபடுத்தி காவிகள் செய்து வருகிற அயோக்கியத்தனமான தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்களை இழிவுபடுத்தி காவிகள் செய்து வருகிற அயோக்கியத்தனமான தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சனாதன எதிர்ப்பு மாநாட்டினை நடத்தி காவிகளுக்கு வளைந்து கொடுக்காத முக்கியமான அரசியல் கட்சி தலைவராக திருமாவளவன் அவர்கள் இருக்கிறார். தமிழினத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் களத்தில் நிற்கிறார். அவரை குறிவைத்து மிக மோசமான இழிவான தாக்குதலை பாஜக-வின் எச்.ராஜா தொடங்கி பலரும் செய்து வருகிறார்கள். தொடர்ச்சியாக நாகரீகமற்ற கொச்சையான வார்த்தைப் பிரயோகங்களையும், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை இழிவுபடுத்தும் நோக்குடனும் பாஜகவின் பிரமுகர்கள் திருமாவளவன் அவர்களை நோக்கி செய்து வருகிறார்கள்.

எத்தகைய எதிர் கருத்தாக இருந்தாலும் அதனை மிக நாகரிகமான முறையில் தெளிவாக ஆதாரங்களுடன் எடுத்து வைத்து வருகிறார் தோழர் திருமாவளவன். அவரது சரியான கருத்துகளை கருத்து ரீதியாக எதிர்கொள்ள முடியாத பாஜகவினர் கீழ்த்தரமாக அவரைக் குறிவைத்து பேசி வருகிறார்கள்.

ஒரு அநாகரிகமான, கீழ்த்தரமான அரசியலுக்கு உதாரணமாக பாஜகவினரும், இந்துத்துவ அமைப்புகளின் அரசியல் பிரமுகர்களும் திகழ்ந்து வருகிறார்கள்.

வரம்பு மீறி பேசியும், செயல்பட்டும், போலியான செய்திகளை பரப்பியும் தோழர் திருமாவளவன் அவர்களை வீழ்த்திட நினைக்கும் காவி கும்பலின் அயோக்கியத்தனத்தினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply