பாபர் மசூதி தீர்ப்பு குறித்து 9/11/2019 மாலை மே பதினேழு இயக்கம் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு

பாபர் மசூதி தீர்ப்பு குறித்து 9/11/2019 மாலை மே பதினேழு இயக்கம் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு

ராமர் பிறந்த நிலம் என்கிற கோரிக்கை 1949க்கு முன்பு இல்லவே இல்லை. ராமாயணத்தை வெகுமக்களிடம் கொண்டு சென்ற அயோத்தியைச் சார்ந்த துளசிதாசரே வைக்காத விடயத்தை, பாபர் மசூதியை இடித்த சமூக விரோத அமைப்பு வைத்துக் கொண்டு இருக்கிறது.

பிரம்ம சமாஜ்யமோ, ஆரிய சமாஜ்யமோ, விவேகானந்தரோ அல்லது ராமகிருஷ்ண பரமஹம்சரோ கூட இப்படிப்பட்ட கோரிக்கையை வைக்கவில்லை. எனவே இந்துவாக இருக்கக் கூடிய வெகுமக்களுக்கும், ராமர் பிறந்த நிலம் என சொல்லும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த தொடர்பும் இல்லாமல், அவர்களது நிலத்தினை வன்முறையின் மூலமாக பிடுங்கிவிட முடியும் என்ற நிலை ஏற்றுக் கொள்ளப்படப் போகிறதா என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது. இதே போன்று சிறுபான்மையினரின் பிற நிலங்களும் பிடுங்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது என்ற கேள்வி எங்களுக்கு இருக்கிறது.

பாபர் மசூதியை இடித்த இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கப்படப் போகிறது என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகிறோம்.

– மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி

Leave a Reply