தமிழ்நாடு அரசே! தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த கும்பலை உடனே கைது செய்!

தமிழ்நாடு அரசே! தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த கும்பலை உடனே கைது செய்! – மே பதினேழு இயக்கம்

தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம கும்பல் கருப்பு மையையும், சாணத்தையும் வீசி அவமதித்து சென்றிருக்கிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரும் அடையாளமாக இருக்கக் கூடிய திருவள்ளுவரை அவமதித்திருப்பது தமிழர்களிடையே பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. உலகத்திற்கே மானுடத்தை போதிக்கிற அற நூலாக திருக்குறள் இருக்கிறது. அப்படிப்பட்ட திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்த செயல் என்பது யாரோ தூண்டுதலின் பெயரால் நடைபெற்ற செயலாகவே இருக்க முடியும்.

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இணையதள பிரிவினர் மதச்சார்பற்ற தமிழரின் அடையாளமான திருவள்ளுவருக்கு காவி உடையும், பட்டையும் அணிவித்து எடிட் செய்து ஒரு படத்தை வெளியிட்டு அவமதித்ததற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இது நடைபெற்ற அடுத்த தினங்களிலேயே தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் வன்முறையை உருவாக்கும் நோக்குடன் அம்பேத்கர் சிலையை அவமதிப்பது, பெரியார் சிலையை அவமதிப்பது, தற்போது திருவள்ளுவர் சிலை என்று சிலை அவமதிப்பினை ஒரு கலாச்சாரமாக சில சமூக விரோத சக்திகள் செய்து வருகின்றன.

அந்த கும்பல் யாராக இருந்தாலும் உடனடியாக கண்டறியப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply