காஞ்சி மக்கள் மன்ற தோழர் மீதான இந்துத்துவ கும்பலின் தாக்குதலையும், நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கும் காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கின்றோம்!

காஞ்சி மக்கள் மன்ற தோழர் மீதான இந்துத்துவ கும்பலின் தாக்குதலையும், நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கும் காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை சேர்ந்த இந்துத்துவ கும்பல், சாராயம் காய்ச்சுவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே பகுதியில் செயல்பட்டு வரும் கஞ்சி மக்கள் மன்ற வேலூர் மாவட்ட பொறுப்பாளர் தோழர் விவேக், தோழமை அமைப்புகளோடு இணைந்து இந்த இந்துத்வ கும்பலை எதிர்த்து நீண்டகாலமாக எதிர்த்து வருகின்றனர்.

இந்த இந்துத்துவ கும்பல் பெருகரும்பூர் பகுதியில் சாராயம் காய்ச்சுவதை அறிந்த தோழர் விவேக், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் தோழர் தினேஷ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தோழர்கள், 24-10-19 வியாழன் அன்று காலை, இந்துத்துவ கும்பல் சாராயம் காய்ச்சும் இடத்தை அடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.

இதனால் கோவம் கொண்ட சமூக விரோத இந்துத்துவ கூட்டம், கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களையும் மனதில் கொண்டு, தோழர் விவேக் மீது மாலை வேளையில் கடுமையான தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர். காவல்நிலையத்திலும் புகுந்து தாக்கியுள்ளனர். நிலை அறிந்து காவல் நிலையம் வந்த மக்கள் மீதும் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இவை அனைத்தையும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

மக்களிடையே சாதி மத வெறியை தூண்டி, மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வரும் இந்த இந்துத்துவ கும்பல், தோழர் விவேக் மீது நிகழ்த்திய இந்த தாக்குதலை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல், தாக்குதலை தடுத்து நிறுத்தாமல் இந்துத்துவ கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறையினரையும் கண்டிக்கின்றோம். வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோத இந்துத்துவ கும்பலை உடனடியாக கைது செய்து கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்ப வலியுறுத்துகின்றோம்.


மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply