டிசம்பர் 15 கோவையில் நீலச்சட்டை பேரணி. தோழர்களே திரண்டு வாருங்கள்!

- in கோவை, சாதி, பேரணி

டிசம்பர் 15 கோவையில் நீலச்சட்டை பேரணி. தோழர்களே திரண்டு வாருங்கள்!

வரும் டிசம்பர் 15 ம் தேதி கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற இருக்கிறது.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் நீலச்சட்டை பேரணியில் பங்கேற்க உள்ளன. அம்பேத்கரிய, பெரியாரிய, தமிழ்த்தேசிய மற்றும் முற்போக்கு அமைப்புகள் பங்கேற்கின்றன.

தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மே பதினேழு இயக்கத் தோழர்கள் குடும்பத்துடன் நீலச்சட்டையுடன் வருகை தந்து மாநாட்டிற்கு வலுசேர்க்க வேண்டுமென இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

இயக்கத் தோழர்கள் மட்டுமல்லாமல், சாதி ஒழிப்பை விரும்புகிற அனைத்து தோழர்களும் குடும்பத்துடன் வரவேண்டும் என மே பதினேழு இயக்கம் அழைக்கிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply