நாளுக்கு நாள் கீழிறங்கும் பொருளாதாரம்!! நாடெங்கும் 20லட்சம் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!

நாளுக்கு நாள் கீழிறங்கும் பொருளாதாரம்!!
நாடெங்கும் 20லட்சம் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!
கவலையில்லாத மோடி அரசு! துணைபோகும் ஆர்.எஸ்.எஸ்!

1,76,000 BSNL ஊழியர்கள் சம்பளம் இல்லாமலும் தனியாருக்கு தங்கள் நிறுவனம் விற்கப்படும் பதபதைப்பிலும் இருக்கிறார்கள்.

20,000 ஊழியர்களை கொண்ட Air India நிறுவனம் தங்களது நிறுவனத்தின் சொத்துக்களை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது நடந்தால் ‘விமான ஓட்டிகளின் சங்கம்’ தாங்கள் மொத்தமாக ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என பொது மக்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
பொது துறை வங்கிகளில் உள்ள 8, 00, 000 ஊழியர்களும் ‘Wage revision”இல் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக போராட்டத்தை முன்னெடுக்கும் நடவக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாடு முழுவதிலும் மொத்தமாக 20,00,000 ( 20 லட்சம் ) பொதுத்துறை ஊழியர்கள் தனியார் மயத்தின் பிடியில் தாங்கள் சிக்க போகும் அபாயத்தை மக்களுக்கு சொல்லி கொண்டிருக்கிறார்கள். அரசை எதிர்த்து கேள்வி எழுப்புகிறார்கள். https://www.businessinsider.in/careers/news/over-2-million-government-employees-are-angry-anxious-and-dejected-over-salaries-hikes-and-job-security/articleshow/71622581.cms

இது வெறும் சம்பளம் கேட்டு பெறும் வழக்கமான போராட்டமல்ல. ரயில்வே, தகவல் தொடர்பு என மோடி அரசு தனியாருக்கு விற்க துடிக்கும் அணைத்தும் எளிய மக்களின் அன்றாட வாழ்வோடு நேரடி தொடர்பில் இருப்பது. தொலைபேசி கட்டணத்தை நெறி படுத்துவது TRAI என நாம் நம்பினால் நம்மை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது. சந்தையில் இருக்கும் அரசு நிறுவனமான ‘BSNL’தான் மற்ற நிறுவனங்கள் தங்கள் நோக்கத்திற்கு விலையை ஏற்றாமல் கட்டுக்குள் வைத்திருப்பது.

தனியார் பேருந்துகளின் பண்டிகை கால பேருந்து கட்டணத்தையும், ரயில் கட்டணத்தையும் நினைத்து பாருங்கள். ரயில்வே பிளாட்பாரத்தில் டீ விற்கும் முதியவர்களையும், பெட்டிக்குள் பழம் விற்கும் பெண்களையும் யோசித்து பாருங்கள்.

நாம் போராடி பெற்ற இட ஒதுக்கீடு உரிமை தனியார்மயத்தில் என்ன ஆகும் என சிந்தித்து பாருங்கள்.
அமைப்பாக உள்ள துறைகளுக்கே இந்த நிலையெனில் மீன் விற்கிற பாட்டிகள்,வீட்டிற்கு வந்து பூ விற்கும் பெண்கள், தெருவோரம் சாப்பாட்டு கடை போடுபவர்கள் போன்ற Informal sector’இல் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தும் மக்களை இந்த அரசு எப்படி கையாளும்?

எப்போது பார்த்தாலும் நாங்கள் இந்துக்களுக்காகவே இருக்கிறோமென்று வாய்சவாடல் பேசும் பாசகாவோ அல்லது அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸோ இன்று வீதியில் நிற்கும் 20லட்சம் இந்துக்களுக்காக ஏன் பேசவில்லை. இன்னும் சொல்லப்போனால் இரண்டு மாதங்களுக்கு முன்னால் 16.07.19அன்று BSNL நிறுவனத்தை இன்னும் ஏன் தனியாருக்கு கொடுக்கவில்லை என்று தனது அதிகாரபூர்வ இதழான ’ஆர்கனைசரில்’ கட்டுரை எழுதியது ஆர்.எஸ்.எஸ். https://www.organiser.org/Encyc/2019/7/16/Reviving-the-BSNL-.html?fbclid=IwAR2PD_z-dDV0fXDec1q08W_QEkWoxlPkH6C41dQ9LlGA3b8wmjxAUSiU3rg

அதன் பின் பாஜக துணிந்து BSNL-ஐ தனியாருக்கு தாரைவார்க்கும் கொள்கை முடிவை எடுக்கமுற்படுகிறது.
இந்த பாஜக -ஆர்.எஸ்.எஸ் அரசு, விரல் விட்டு எண்ணக் கூடிய பனியா முதலாளிகளுக்காக இந்த நாட்டில் வாழும் 100 கோடிக்கும் அதிகமான மக்களின் (பெரும்பான்மை இந்துக்கள் உட்பட) மீது அறிவிக்கப்படாத போரை தொடுத்திருக்கிறது.
வரும் ஆபத்தை உணர்ந்து விழித்து கொள்ளுங்கள் தோழர்களே.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply