தென்னக இரயில்வேயின் மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களில் 90 விழுக்காட்டிற்கும் மேல் வெளிமாநிலத்தவர்களை பணி நியமனம் செய்ததை கண்டித்து மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் முற்றுகை

தென்னக இரயில்வேயின் மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களில் 90 விழுக்காட்டிற்கும் மேல் வெளிமாநிலத்தவர்களை பணி நியமனம் செய்ததை கண்டித்தும், தமிழ்நாட்டின் வேலைகளை தமிழர்களுக்கே வழங்க கோரியும், ரயில்வே வேலைவாய்ப்புகளுக்கான தேர்வை மாநில மொழியிலேயே நடத்த வேண்டியும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமையில், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் இணைந்து மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை.கு.இராமகிருஷ்ணன் அவர்கள் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில், ரயில்வே துறை வேலைவாய்ப்புகளில் தமிழர்களை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்து முழக்கமிடப்பட்டது. நூற்றுக்கணக்கான தோழர்கள் ரயில்வே கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட போது, காவல்துறையினரால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். மே 17 இயக்கத்தை சேர்ந்த எண்ணற்ற தோழர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகினர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Leave a Reply