ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 42வது கூட்டத் தொடரில் மே பதினேழு இயக்கம்

- in ஈழ விடுதலை

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 42வது கூட்டத் தொடரில் மே பதினேழு இயக்கம்:

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 42வது கூட்டத்தொடரில் மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் விவேகானந்தன் பங்கேற்றார். தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் விதமாக இக்கூட்டத்தொடரில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் அனைத்து நாடுகளின் பிரதிநிநிதிகளும் பங்கேற்கக் கூடிய பிரதான அரங்கில் தோழர் விவேகானந்தன் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்டு 5 முறை உரைகளை பதிவு செய்தார். இவற்றில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும், தமிழீழ விடுதலைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும், இலங்கையின் அரசியல் சாசனம் தோல்வியடைந்த ஒன்று என்றும், இலங்கை குறித்து ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட 2015ம் ஆண்டின் தீர்மானம் சர்வதேச விதிகளின்படி அமையவில்லையென்றும் உரையாற்றினார்.

தமிழர் தரப்பினாரல் ஐ.நாவின் பக்க அரங்குகளில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு கருத்தரங்கங்களில் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்”, “இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்ற தலைப்புகளில் தோழர் விவேகானந்தன் உரையாற்றினார்.

இலங்கையில் ‘தொடரும் தமிழ் இனப்படுகொலை’ என்ற தலைப்பில் 2017-2019 ஆண்டு காலத்தில் நடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை குறித்தான ஆவணங்களைக் கொண்ட சிறு புத்தகக் கையேடு ஒன்று மே பதினேழு இயக்கத்தினால் மனித உரிமைகள் ஆணையத்தின் பக்க அரங்கில் வெளியிடப்பட்டு, பல்வேறு நடுகளைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகளுக்கும், செயல்பாட்டாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

மேலும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பங்கேற்க முடியாத வண்ணம் அவரது கடவுச்சீட்டு(Passport) பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறித்தும், அவர் மீது தொடரும் அடக்குமுறைகள் குறித்துமான கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டது.

Leave a Reply