மே 17 இயக்கம் மற்றும் தோழர் திருமுருகன் காந்தி மீது அவதூறுகள் பரப்பி வரும் மாரிதாஸ் மீது வழக்கு பதிய ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் வழக்கறிஞர்களுடன் காவல்துறை ஆணையரை சந்தித்தார்

மே பதினேழு இயக்கம் மற்றும் தோழர் திருமுருகன் காந்தி மீது தொடர்ந்து அவதூறுகள் பரப்பி வரும் மாரிதாஸ் என்னும் நபர் மீது வழக்கு பதிவதற்காக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் வழக்கறிஞர்களுடன் காவல்துறை ஆணையரை சந்தித்தனர். மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்ய அனைத்து முகாந்திரமும் உள்ளதாக ஆணையர் கூறிய நிலையில், அந்நபரின் முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்கள் காவல் துறை உட்பட பொதுவெளியில் கிடைக்கப்பெறாத நிலையில், அவை திரட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது. மாரிதாஸ் தனது தகவல்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த போது தோழர் பிரவீன் குமார் அளித்த நேர்காணல்.

Leave a Reply