வெல்க தமிழ்நாடு – பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

வெல்க தமிழ்நாடு – பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின்141-வது பிறந்தநாளை முன்னிட்டு, 20-09-19 வெள்ளி அன்று மாலை, சென்னை எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் (கே.கே.நகர்) பகுதியில் மே பதினேழு இயக்கம் சார்பாக வெல்க தமிழ்நாடு என்ற தலைப்பில் பெருந்திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழரின் ஆதி இசையான பறையிசையுடன் துவங்கிய கூட்டத்தில், பெரியார் புகழ்பாடும் பாடல்களும் பாடப்பட்டன. தோழர் சுசீந்திரன் ஒருங்கிணைக்க, தோழர் அருள் வரவேற்புரையாற்ற, தோழர் கொண்டல் சாமி துவக்க உரையாற்றினார். தொடர்ந்து, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் பிரவீன் குமார், தோழர் புருசோத்தமன், தோழர் அருள்முருகன் ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மதத்தின் பெயரால் நடைபெறும் அரசியலின் பின்னணியையும், தமிழர்களின் மரபார்ந்த வழிபாட்டு பண்பாட்டிற்கும், தற்போது இந்து என்ற பெயரில் தமிழர்கள் ஏமாற்றப்படுவதோடு, தமிழர்களின் உரிமைகள் எவ்வாறெல்லாம் பறிக்கப்படுகின்றன என்பது குறித்து விரிவாக உரையாற்றினார்.

தோழர் கார்த்தி நன்றியுரையாற்றினார். இப்பொதுக்கூட்டத்தில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்களும், ஏராளமான மக்களும் குடும்பங்களோடு பங்கேற்றனர்.

Leave a Reply