தந்தைப் பெரியாரின் 141வது பிறந்த நாள் – மே 17 இயக்கம் மரியாதை.

தமிழின மீட்சிக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய தந்தைப் பெரியாரின் 141வது பிறந்த நாள் விழா இன்று (17-09-19) கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, மே 17 இயக்கம் சார்பாக தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் தந்தைப் பெரியாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னையில், தியாகராய நகரில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு, பறையிசை முழங்க, பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் முழக்கங்கள் இட்டவாறு, இளந்தோழர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் உட்பட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply