திருப்பூரில் வணிகர்களை மிரட்டி அடாவடி வசூல் செய்யும் இந்து முன்னணியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் வணிகர்களை மிரட்டி அடாவடி வசூல் செய்தும், தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் தாக்கியும் அராஜகத்தில் ஈடுபட்டு வரும் இந்து முன்னணியைக் கண்டித்தும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருப்பூர் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தோழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply