மே பதினேழு இயக்கத்தின் மீது பாஜக மேற்கொள்ளும் இந்த அவதூறு பிரச்சாரத்தினை நிறுத்தி மன்னிப்பு கோராவிட்டால் இயக்கம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்

- in அறிக்கைகள்​, மே 17

பாஜக ஏன் தமிழ்நாட்டின் மக்களால் வெறுக்கப்படுகிறது என்பதற்கு அவர்களின் அறுவருக்கத்தக்க செயல்களே காரணமாக இருக்கின்றன.

ஜோயல் பிரகாஷ் என்ற மாணவர் சாதி வெறி கொண்ட காவிவாத பேராசிரியர் ஒருவரால் பல்வேறு இழிவுகளுக்கு உள்ளாக்கப்பட்டதால், தற்கொலைக்கு தள்ளப்பட்டார். அந்த மாணவரின் மரணத்திற்கு நீதி கேட்கும் போராட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேசிய காணொளியை துண்டு, துண்டாக வெட்டி, ஒட்டி அதை பரப்பி கீழ்த்தரமான பொய் பிரச்சாரத்தினை பாஜக அதிகாரப்பூர்வமாக செய்கிறது.

காணொளிகளை வெட்டி,ஒட்டி ஒருவர் பேசிய விடயங்களை திரித்து அவர் மீது அவதூறு பரப்புவது, போட்டோஷாப் வேலைகள் செய்து ஒருவர் சொல்லாததை சொல்லியதாக பொய்யை பரப்புவது, தேவையற்ற சர்ச்சைகளை சமூகத்தில் உருவாக்கி அதன் மூலம் மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிளவுபடுத்தி அரசியல் பலன் காண நினைப்பது என மோசமான அரசியல் முன்னுதாரணங்களை பாஜக தமிழ்நாட்டில் செய்து கொண்டிருக்கிறது.

மூன்றாம் தர பொய்யர்களை வைத்து போலியான விடயங்களை முன்வைத்து வீடியோக்கள் போடுவது, போலி செய்தி இணையதளங்கள் மூலம் வதந்திகளை பரப்புவது என இத்தகைய அவதூறுப் பிரச்சாரங்களை பாஜகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மே பதினேழு இயக்கத்தின் மீது பாஜக மேற்கொள்ளும் இந்த அவதூறு பிரச்சாரத்தினை நிறுத்தி மன்னிப்பு கோராவிட்டால் மே பதினேழு இயக்கம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply