பிறப்பால் அனைவரும் சமமல்ல என்றும், பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று பேசிய வெங்கடகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மனு

பிறப்பால் அனைவரும் சமமல்ல என்றும், பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்றும் சாதி மோதலைத் தூண்டும் வகையிலும், சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை இழிவு செய்யும் வகையிலும் Tamil Brahmins Global Summit எனும் நிகழ்வில் பேசிய வெங்கடகிருஷ்ணன் எனும் நபரின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று (8-3-2019) காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கையளிக்கப்பட்டது.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் உமாபதி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் வினோத், வழக்கறிஞர்கள் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் ஆகியோர் இணைந்து இப்புகாரினை அளித்தனர்.

Leave a Reply