கரூரில் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம்

கரூரில் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தினால் ஜூலை 28 அன்று நடத்தப்பட்டது.

இந்த கருத்தரங்கில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் விவேகானந்தன் மற்றும் மகாமணி, சமூக கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பின் தோழர் ராமசாமி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் தனபால், வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன், சமானிய மக்கள் நல கட்சியின் தோழர் குணசேகரன், SUCI(கம்யூனிஸ்ட்) அமைப்பின் தோழர் மோகன் ஆகியோர் புதிய கல்விக் கொள்கை வரைவினை ஏன் எதிர்க்க வேண்டும் என்று உரையாற்றினார்கள். மே பதினேழு இயக்கத் தோழர் திலீபன் நன்றியுரை ஆற்றினார்.

புதிய கல்விக் கொள்கை வரைவு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், மாநில அரசின் அதிகாரங்களைப் பறிப்பதாகவும், கல்வியை மதவாதத்தை புகுத்தும் நோக்கத்தில் அமைந்திருப்பதாகவும் தோழர்கள் விரிவாக விளக்கிப் பேசினர்.

Leave a Reply