புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்? கருத்தரங்கம்

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தினால் கோவையில் 10-07-2019 புதன் அன்று நடத்தப்பட்டது.

இக்கருத்தரங்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன், திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் நேருதாஸ் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

கடந்த மாதம் புதிய கல்விக் கொள்கையினுடைய வரைவு வெளியானது. அவ்வரைவில் உள்ள மோசடிகளை விளக்கும் வண்ணம் இக்கருத்தரங்கம் முன்னெடுக்கப்பட்டது.

புதிய கல்விக் கொள்கை என்பது குலக் கல்வி முறையை மீண்டும் கொண்டு வர இருப்பதையும், கல்வியின் மீதான மாநில உரிமை பறிக்கப்பட இருப்பதையும், கல்வி முழுவதுமாக கார்ப்பரேட் தனியாரின் லாபம் பார்க்கும் பண்டமாக மாற்றப்பட இருப்பதையும், சமூக நீதி அழிக்கப்பட இருப்பதையும் தோழர்கள் விளக்கிப் பேசினர்.

Leave a Reply