ஒரு தேசம் ஒரு ரேசன் அட்டை என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் சூழ்ச்சி

ஒரு தேசம் ஒரு ரேசன் அட்டை என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் சூழ்ச்சி – மே பதினேழு இயக்கம்

பொது வினியோக திட்டடாதின் மீதான மாநில அரசகளின்உரிமைகளை பரிக்கும் வகையில் ஒரு நாடு ஒரு ரேசன் அட்டை என்ற சூழ்ச்சி திட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது.
ஒரு தேசம் ஒரே வரி,
ஒரு தேசம் ஒரே மொழி, 
ஒரு தேசம் ஒரே தேர்தல்,
ஒரு தேசம், ஒற்றைக் கல்வி,
ஒரு தேசம் ஒரே மதம்
என்ற பாசிச நோக்கில் இந்தியாவின் தேசிய இனங்களை ஒடுக்குவதை பா.ஜ.க அரசு வேலைத்திட்டமாக செய்து வருகிறது. இது இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கே விரோதமானதும் கூட. மாநில அரகளின் அதிகாரங்களை பறித்து, ஒரு நகராட்சி நிர்வாகத்தை போல அதிகாரமற்ற ஒரு பொம்மை அரசாக மத்திய பாஜ.க அரசு மாற்றி வருகிறது.

இதன் மூலம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தியா முழுதும் எங்கு வேண்டுமானாலும் ரேசன் கடைகளில் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்ததந்த மாநிலத்தின் சமுக பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாநில அரசுகள் ரேசன் பொருள்களுக்கான விலையை நிர்ணயித்து மக்களுக்கு வழங்கி வருகின்றன. இந்தியா முழுதும் ஒரே ரேசன் அட்டையின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்றால் இந்தியா முழுதும் ரேசன் பொருட்களுக்கு ஒரேவிலையை இந்திய அரசு கொண்டுவரப் போகிறதா? ஒரு மாநிலத்தின் சமுக சூழலை ஆராயாமல் இந்தியா முழுவதும் ரேசன் பொருட்களுக்கு ஒரே விலையை நிர்ணயிப்பது என்பது நேர்மையற்ற செயலாகும்.

WTO ஒப்பந்தத்தில் இந்திய அரசு 2016ம் ஆண்டு கையெழுத்திட்டது முதல், தொடர்ச்சியாக பொது விநியோகத் திட்டத்தினை சீரழிக்கிற வேலையினை செய்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாகவே ஒரு தேசம், ஒரு ரேசன் அட்டை என்ற இந்த திட்டத்தினைக் கொண்டு வருகிறது. மேலும் வடநாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக தொழிலாளர்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு அகதியாக இடம் பெயர்வதை ஊக்குவிக்கும் விதமாகவும் இத்திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்துகிறது. வட இந்திய தொழிலாளர்களுக்கு தங்கள் சொந்த மாநிலத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்கித் தர வக்கில்லாமல், நாதியற்றவர்களாய் அகதிகளாய் அவர்களை சுற்ற விடும் மத்திய அரசு, தற்போது அவர்களுக்கான சேவகர்களைப் போல நாடகமாடி இத்திட்டத்தினை கொண்டுவருகிறது.

பொதுவிநியோகத் திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில் தான் Universal PDS என்று சொல்லப்படக்கூடிய அனைவருக்கும் ரேசன் பொருட்களை வழங்கும் முறை இருக்கிறது. இக்கட்டமைப்பினை உடைக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டின் வரிப்பணத்தின் நிதியில் கிடைக்கும் சேவைகளை எடுத்து பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அளிப்பது எப்படி நியாயமான நடைமுறையாக இருக்க முடியும்?

ஒற்றை என்ற பெயரில் இந்தியாவில் திணிக்கப்படும் அனைத்து திட்டங்களும் அயோக்கியத்தனமானவையே. வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் வசனங்களை பேசிவிட்டு, இப்போது எல்லாவற்றிலும் ஒற்றைத் தன்மையை திணிக்கும் செயலை அயோக்கியத்தனம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்.

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பொதுவான அதிகாரத்தில் இருக்கும் பொதுவிநியோகத் திட்டத்தினை மொத்தமாக மத்திய அரசின் கீழ் மட்டுமே கொண்டு செல்வதன் மூலம், ரேசன் கடைகளில் பொருட்களைக் குறைப்பதையும், கடைகளைக் குறைப்பதையும் மத்திய அரசு தன் விருப்பப்படி செய்ய இயலும். உணவுத் துறையில் கார்ப்பரேட்டுகளை இறக்கி விட முடியும். ரேசன் கடைகளை மூடும் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஆனால் அதனை மறைப்பதற்காக ”இடம் பெயர்ந்த” தொழிலாளர்களுக்கு உதவப் போவதாக ஒரு பொய்யை சொல்லி இத்திட்டத்தினை மத்திய அரசு கொண்டுவருகிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply