கடந்த ஐந்தாண்டு மோடி ஆட்சியில் இந்திய ஒன்றியத்தின் கடன் சுமை இமாலயளவு அதிகரித்திருக்கிறது

கடந்த ஐந்தாண்டு மோடி ஆட்சியில் இந்திய ஒன்றியத்தின் கடன் சுமை இமாலயளவு அதிகரித்திருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டு மோடி ஆட்சியில் நாட்டின் கடன் அளவு 54% அதிகரித்துள்ளது என இந்திய ஒன்றிய அரசின் வர்த்தகத்துறை கடந்த 12ஆம் தேதி வெளியிட்டிருக்கிறது. அதாவது ஜூன் 2014 இல் 56,90,763 ஆக இருந்த கடன் சுமை,மார்ச் 2019ல் 84,68,086 ஆக கிட்டதட்ட 54% அதிகரித்துள்ளது.

அதேபோல கடன் பெறுவதும் மிகப்பெரியளவில் 57% அதிகரித்து இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வரும் முன் 48 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டிருந்தது. இப்போது அது 75 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.

உள்நாட்டு கடன் (internaldebt) உயர்வால் பொதுக்கடன்(publicdebt) 60% அதிகரித்துள்ளது.
ஜூன் 2014ல் 44 லட்சம் கோடியாக இருந்தது மார்ச் 2019ல் 70 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.

2014 இல் 9.8% அதிகரித்து இருந்த பொது கடன் என்பது 2018ல் 11.63% ஆக அதிகரித்து, மேலும் 2018 டிசம்பர் முதல் 2019 மார்ச் வரை பார்த்தால் பொதுக் கடன் வளர்ச்சி அளவு 1.5 சதவீதமாக மேலும் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு பெருமளவு உள்நாட்டு கடனை சார்ந்தே இருக்கிறது. இது 73 சதவீதமாக 2009ல் இருந்தது, பின்னர் 80 சதவீதமாக 2014ல் அதிகரித்து, 2017ல் 83% ஆகி உள்ளது.

உள்நாட்டுக்கடன் அதிகரிக்க சந்தைக்கடன் (market loan) அதிகரித்ததே காரணம். ஏனென்றால் உள்நாட்டுக்கடன் சந்தை கடனை சார்ந்ததாகும். 2014 ஜூன் முதல் எப்பொழுது வரை சந்தை கடன் 54% உயர்ந்துள்ளது. அதாவது, 2014 இல் 35 லட்சம் கோடியாக இருந்தது மோடி அரசின் ஐந்தாண்டு ஆட்சிக்குப்பின்னர் 55 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இந்திய ஒன்றியத்தை முன்னேற்றுகிறோமென்று சொல்லி ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் சுமார் 50வருடங்கள் பின்னோக்கி இந்தியாவை இழுத்து வந்த பெருமை மோடியின் கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்கு உண்டு. இப்போது அதே கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது எப்படியும் இந்திய ஒன்றியம் 100ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply