“தகுதி”யின் முழுஉருவான நீட்டின் அவலம்

 

நீட் தேர்வில் 2018ல் chemistry க்கும் Physicsக்கும் ஒற்றை இலக்க மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் 50 பேருக்கு பஞ்சாபில் மெடிக்கல் அட்மிசன் கிடைத்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இதே நிலைதான் சில மாநிலங்களில் இதைவிட மோசம்.

இதில் 7 பேர் “சைபர்” மதிப்பெண்கள் பெற்றவர்கள், 10 பேர் “நெகட்டிவ்” மதிப்பெண்கள் பெற்றவர்கள்.
இவர்களில் 85 சதவீதம் பேரும்
தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்த்துள்ளார்கள். இதற்கு அவர்கள் கொடுக்கும் கட்டணம் 68 லட்சம்.

65000 சீட்டுகளுக்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட்டில் வெற்றி பெற்று வரும்போது 68 லட்சம்
பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க ஏழைகளால் முடியுமா?

Physicsக்கும் Chemistry க்கும் 45
கேள்விகள் வீதம் கேட்கப்படுகிறது இதில் சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்களும், தவறான பதிலுக்கு -1 மதிப்பெண் வழங்கப்படும். நான்கில் ஒன்று சரியாக இருந்தால் கூட 180க்கு 10 மதிப்பெண் வர வேண்டும். அது கூட கிடைக்காதவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பணம் இருப்பதால் மருத்துவம் பயின்று வருகிறார்கள்.

பல்வேறு விமர்சனங்கள் எழுந்தும் அரசாங்கம் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கட் ஆப் வைக்க தயங்குவது இது போன்ற மாணவர்களை காப்பாற்ற தானோ.

https://timesofindia.indiatimes.com/home/education/negative-physics-chem-neet-marks-welcome-to-mbbs/articleshow/69796429.cms

பிள்ளைகளின் கம்மலையும் மூக்குத்தியையும் கழட்டி “தகுதி”படைத்த தேர்வை நடத்தும் அரசு நெகட்டிவ் மதிப்பெண்கள் பெற்ற பணக்கார மாணவர்களை பின்வாசல் வழி மருத்துவர்களாக்கும் திட்டத்தின் பெயர் தான் நீட். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரிய மருத்துவர்களை உருவாக்குகிறது அரசு. கடினமாக படித்த ஏழை அனிதாக்களின் மருத்துவராகும் கனவுகளை சிதைத்து கொலை செய்கிறது, இன்னும் எத்தனை மருத்துவர்களை தமிழகம் இழக்கப்போகிறதோ…

Leave a Reply