மாணவி அனிதா மரணத்தின் போது பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வழக்கில் மே பதினேழு இயக்க தோழர்கள் நீதிமன்றம் வருகை

மாணவி அனிதா மரணத்தின் போது, நீட் தேர்வுக்கு எதிராக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வழக்கில் மே பதினேழு இயக்க தோழர்கள் இன்று 11-6-2019 நீதிமன்றத்தில் ஆஜரானர்கள்.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் உள்ளிட்ட 11 பேர் மற்றும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தோழர்கள் இந்த வழக்கினை சந்தித்து வருகிறார்கள். தற்போது இந்த வழக்கு வாய்தாவிற்காக அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக நீட் தேர்வினால் மரணத்திற்கு தள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளி மற்றும் ஏழை மாணவர்கள் மருத்துவர்களாவது முற்றிலுமாக தடுக்கப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் தமிழ்நாட்டின் குரல் விரிவடைய வேண்டும்.

Leave a Reply