தோழர் திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு

தோழர் திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு

நேற்று முன்தினம் 19.05.19 ஞாயிற்றுக்கிழமை தியாகராய நகர் முத்துரங்கன் சாலையில் மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற “தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீர வணக்க பொதுக்கூட்டத்தில்” மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி விதிமுறைகளை மீறி பேசியதாய் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153(A), 505(2) ஆகிய இரு பிரிவுகளில் பிஜேபியின் அடிமை அரசாக இருக்கும் தமிழக அதிமுக அரசு வழக்கு பதிந்து உள்ளது.

தோழர் திருமுருகன் காந்தி பேசும் அனைத்து கூட்டத்திற்கும் ஏதேனும் ஒரு வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்கிற அழுத்தத்தின் அடிப்படையில் தொடர்ந்து அவர் மீது பொய்யான பல வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.

ஒரு பொறுப்பான அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு நாக்கை அறுப்பேன் கையை உடைப்பேன் காலை உடைப்பேன் என்று பேசும் ராஜேந்திர பாலாஜி மீதும், எப்போதும் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைத்து இரு சமூகங்களிடையே பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசியும் எழுதியும் வருகிற பிஜேபியின் ஹெச் ராஜா போன்ற நபர்கள் மீதும் பாயாத வழக்கு. தோழர் திருமுருகன் காந்தி மீது மட்டும் பாயுமென்றால், இந்த அரசு பிஜேபியின் அடிமை அரசாகத்தான் இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்.

இதுபோன்று கடந்த காலங்களில் போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் எப்படி தமிழக மக்களின் ஆதரவினாலும், சட்டத்தின் துணை கொண்டும் உடைத்தெரிந்து வெளியே வந்தோமோ அதேபோல இந்த பொய் வழக்கையும் துணிவுடன் எதிர்கொள்வோம் என்று மே 17 இயக்கம் உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறது.

மே17இயக்கம்
9884072010

Leave a Reply