1.15லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஓட்டு போடவிடாமல் செய்த பிஜேபி மற்றும் தமிழக அரசு

1.15லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஓட்டு போடவிடாமல் செய்த பிஜேபி மற்றும் தமிழக அரசு

தமிழகத்தில் எப்படியாகினும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவேண்டுமென்று அடிமை எடிப்பாடி தலைமையிலான அதிமுக அரசும், அதற்கு துணைபோகிற மத்திய பார்ப்பன பிஜேபி அரசும் தமிழகத்தில் நடந்து முடிந்திருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் என்னென்ற்ற சட்டவிரோத காரியங்களை வெளிப்படையாகவே செய்தது. அதில் மிக முக்கியமான ஒன்று தனக்கு எதிராக யாரெல்லாம் வாக்களிப்பார்கள் என்று அதிமுகவும்,பிஜேபியும் நினைக்கிறதோ அவர்களின் ஓட்டுரிமையை இல்லாமல் செய்வது. அப்படித்தான் தமிழகத்தில் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லீம்களின் ஓட்டுக்கள் பெருமளவில் இல்லாமல் செய்யப்பட்டது. உதாரணத்திற்கு துறைமுகம் பகுதியில் மட்டும் 10,000 முஸ்லீம்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் 40,000க்கும் மேலான மீனவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து ஏற்கனவே விரிவாக மார்ச் 30அன்று மே பதினேழு இயக்கம் எழுதியிருந்தது.https://may17iyakkam.com/80276/articles/இந்தியாவை-மிகுந்த-ஆபத்தா/

இதனையெல்லாம் தாண்டிய ஒரு கொடுமை கிட்டதட்ட 1.15லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வாக்களிக்கவிடாமல் செய்திருக்கிறார்கள். அதாவது தமிழகத்தில் தேர்தல் வேலைகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்கு படிவம் 12 என்று ஒன்று அவர்களுக்கு கொடுக்கப்படும் அதனை பயன்படுத்தி தபால் மூலம் அவர்கள் வாக்களித்து வந்தார்கள். ஆனால் இந்தமுறை 4லட்சம் பேர் தேர்தல் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஆனால் படிவம் 12 வழங்கப்பட்டதோ வெறுமன 2.85லட்சம் தான். ஆக சுமார் 1.15லட்சம் பேர் வாக்களிக்க முடியாத சூழலை திட்டமிட்டு அதிமுகவும் பிஜேபியும் உருவாக்கியிருக்கிறது. https://timesofindia.indiatimes.com/city/chennai/more-than-1-lakh-govt-employees-teachers-on-poll-duty-denied-opportunity-to-cast-postal-votes/articleshow/69287063.cms

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஓய்வூதிய திட்டம் மாறுதல் உள்ளிட்ட பலகோரிக்கைகளுக்காக கடந்த வருடம் டிசம்பரில் போராட்டம் நடத்தினார்கள். அதை அதிமுக் அரசு கண்டுகொள்ளமால் அவர்களை வேலைய விட்டு நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை எடுத்தது.இதனால் கோபமைடந்திருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்களென்று நினைத்து இந்த சதியை ஆளும் அரசுகள் செய்திருக்கிறது.

இதுபோல தமிழகமெங்கும் எவ்வளவு வாக்களார்களுடைய பெயர்கள் உரிய ஆவணங்கள் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறதென்று தேடிப்பார்த்தால் மிகவும் அதிர்ச்சியளிக்ககூடிய செய்திகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதைபற்றியெல்லாம் எதிர்கட்சியோ அல்லது வேறு எந்த அரசியல் கட்சியோ ஏன் கண்டுகொள்ள மறுக்கிறார்கள் என்பதுதான் நமக்கு புரியவேயில்லை.

Leave a Reply