இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – மே 17 இயக்கம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்கள் சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு குடியிருப்பில் கடந்த 12ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில் அரசு அந்த குடியிருப்பில் வேறு புதிய கட்டிடம் கட்ட இருப்பதாகச் சொல்லி அங்கிருப்பவர்களை காலி செய்யும்படி அரசு கேட்டுக்கொண்டது. புதிய கட்டிடம் கட்டுவதில் யாருக்கும் மாற்றுகருத்தில்லை ஆனால் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருக்கு அரசே மாற்று இடம் வழங்கி அல்லவா அவரை மாற்றியிருக்கவேண்டும் அதை செய்யாமல் இடத்தை காலி செய்யுங்கள் என்று சொல்வது என்ன நியாயம்.

இத்துணைக்கும் அய்யா நல்லகண்ணு அவர்களுடைய தியாகத்தை மதித்து அரசே முன்வைத்து அவருக்கு இலவசமாக அரசு குடியிருப்பை ஒதுக்கியது. ஆனால் அவரோ நான் மற்றவர்களை போல வாடகை கொடுத்தே இங்கிருக்கிறேன் என்று சொல்லி 12ஆண்டுகளாக வாடகை கொடுத்து வசித்து வருகிறார். அப்படிப்பட்ட நேர்மையாளரை அரசு தூக்கி சுமக்க வேண்டும் குறைந்தபட்சம் அவருக்கு உரிய மரியாதையையாவது ஒழுங்காக செய்யலாமே. ஆகவே அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு உடனடியாக மாற்று இடத்தை அரசே வழங்க வேண்டுமென்று மே பதினேழு இயக்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மே 17 இயக்கம்
9884072010

 

Leave a Reply