தோழர் திருமுருகன் காந்தியை ’டேனியல்’ என்று தொடர்ந்து அவதூறு பரப்பும் பிஜேபியை வன்மையாக கண்டிக்கின்றோம்

தோழர் திருமுருகன் காந்தியை ’டேனியல்’ என்று தொடர்ந்து அவதூறு பரப்பும் பிஜேபியை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இன்று சன்நீயூஸ் தொலைகாட்சியில் நடந்த விவாதத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை ’டேனியல் காந்தி ’ என்று வேண்டுமென்றே பெயர் மாற்றி அழைக்கிறார் பிஜேபியின் கரு.நாகராசன். அவர் மட்டுமில்லை தொடர்ந்து இதே போன்ற அவதூறை பிஜேபியினர் பலரும் சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

திருமுருகன் அவர்களின் பள்ளிசான்றிதழ் முதல் அனைத்து ஆவணங்களிலும் அவரது இயற்பெயரான திருமுருகன் என்றும் அவரது அப்பா பெயரான காந்தியும் இருக்கும்போது எந்தவித ஆதாரமுமின்றி தொடர்ச்சியாக இந்த அவதூறை தோழரின் மீது பிஜேபியினர் பரப்புவது கண்டனத்துக்குரியது.

மேலும் பிஜேபியின் மக்கள் விரோத கொள்கைகளை கேள்வி கேட்பவர்களுக்கு ஏன் இப்படியான கிருத்தவ பெயர் சூட்டப்படுகிறது. ஒருவேளை இந்த நாட்டில் டேனியல்களுக்கும் மைக்கல்களுக்கு கேள்விகேட்கும் உரிமையில்லை என்று சொல்ல வருகிறதா பிஜேபி? இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது. ஆகவே இதற்கு மேலும் இந்த பொய் பிரச்சாரத்தை பிஜேபியினர் நிறுத்தாவிடில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

Leave a Reply