சாதிய கொடுமைகளை செய்யும் சாதிவெறி மனநோயாளிகளை அரசே சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும்.

- in சாதி

சாதிய கொடுமைகளை செய்யும் சாதிவெறி மனநோயாளிகளை அரசே சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும்.

கடந்த 28ஆம் தேதி மன்னார்குடி அருகே திருவண்டுதுறை கிராமத்தை சேர்ந்த கொல்லிமலை என்பவரை பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு மரத்தி கட்டி வைத்து அவரது வாயில் மனித மலத்தையும், சிறுநீரையும் செலுத்தி இன்னும் சொல்லக்கூசுமளவுக்குமான கொடுமைகளை செய்திருக்கிறார்கள் சாதி வெறியர்கள்.

இது குறித்து அருகிலுள்ள கோட்டூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து சாதிவெறியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு 4பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் இரண்டு வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் இவர்கள் மீண்டும் மீண்டும் இதே போல சாதிய குற்றங்களை எந்த வித குற்றணவுணர்ச்சியும் இல்லாமல் தொடர்ச்சியாக செய்துகொண்டே இருப்பதற்கு அரசுகள் தான் காரணம். எனவே அரசே இனி இது போல மனிதனை மனிதன் இழிவுசெய்யும் சாதிவெறி கொடூரர்களை சமூக புறக்கணிப்பு செய்யவேண்டும். அவர்களது ரேசன் அட்டை உள்ளிட்ட அரசு நலதிட்ட உதவிகள் எதுவும் அவர்களுக்கு கிடைக்காமல் செய்து சமூகத்திலிருந்து பிரிக்க வேண்டும். இதுவே குறைந்தபட்சம் அடுத்தவர்கள் இது போன்ற சாதிவெறி கொடூரங்களை செய்யாமல் இருப்பதற்கான ஒரு வழியாக அமையும். மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை இன்னும் கடுமையானதாக மாற்ற வேண்டும்.

ஆகவே அரசுகளை இதனை செய்யவைக்க தமிழகத்திலிருக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply