மே 17 இயக்கத்தின் சார்பாக கோவையில் நடைபெற்ற தமிழ்நாட்டின் உரிமைகளை காப்போம் மாபெரும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கோவையில் மே 17 இயக்கத்திற்கு எங்கும் பொதுக்கூட்டம் நடத்த இந்துத்துவ கும்பல்களின் அறிவுறுத்தலின் பேரில் அனுமதி மறுத்து வந்த நிலையில் கடுமையான சட்டப் போராட்டத்துக்கு பின் நேற்று 13.04.19 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை சித்தாபுதூர் வி கே கே மேனன் சாலையில் மே 17 இயக்கத்தின் சார்பாக தமிழ்நாட்டின் உரிமைகளை காப்போம் மாபெரும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் வே.ஆறுச்சாமி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன் திராவிடர் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் வெண்மணி மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் மற்றும் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில் மாற்று இயக்க மற்றும் கட்சிகளை சேர்ந்த தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டார்கள்.

தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய சிறப்புரை.

Leave a Reply