பிஜேபியின் அமித் ஷா கும்பல் செய்த 3லட்சம் கோடி மெகா ஊழலின் பிண்ணி

DE LA RUE கம்பெனி – அமித் ஷா – லட்சம் கோடி மெகா ஊழல்:

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த நிகழ்வு. 1999 டிசம்பர் மாதம் 24ம் தேதி காத்மண்டுவில் இருந்து புதுடெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC814 ல் கடத்தப்பட்டு முதலில் அமிர்தசரசில் தரையிறக்கப்பட்டு பின் துபாய் இறுதியாக தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்த கந்தகார் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அமிர்தசரசில் தரையிறக்கப்பட்டபோது ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலமாக பயணிகளை காப்பாற்றமுடியும் என்ற சூழல் இருந்தபோதும் அன்றைய பா.ஜ.க அரசு அதை தவிர்த்தது. அதற்கு காரணம் அந்த விமானத்தில் பயணிகளுடன் இந்திய உளவு அமைப்பின் மிக முக்கியமான அதிகாரி சசி பூசன்சிங் இருந்ததுதான் என்றனர். இறுதியாக கந்தகாரில் பேச்சுவர்த்தையின் அடிப்படையில் மூன்று தீவிரவாதிகளை விடுவித்து, பயணிகளையும் இந்திய அதிகாரியையும் காப்பாற்றினார்கள். தீவிரவாதிகளுடனான பேச்சுவார்த்தையை முன்நின்று நடத்தியவர் அன்றைய இந்திய உளவுத்துறையின் தலைவர் அஜித் தோவல். இவர் விடுவித்த மூன்று தீவிரவாதிகள்தான் பின்நாளில் ஜெயிஸ் இ முகமது எனும் அமைப்பை துவங்கி இந்தியாவில் பாராளுமன்ற தாக்குதல் முதல் புல்வாமா வரை அனைத்து தாக்குதல்களுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள்.

இவ்வளவு பெரிய பாதுகாப்பு தோல்வியை நிகழ்த்திய அஜித் தோவலுக்கு 2014ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவின் அதி உயர் பொறுப்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை கொடுத்தது மோடி அரசு. தோல்வியுற்ற அதிகாரிக்கு எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை மோடி அரசு கொடுத்தது?? யார் இவருக்கு சிபாரிசு செய்திருப்பார்கள் என்று தேடினால் 1999ம் ஆண்டு கடத்தப்பட்ட IC814 விமானத்தில் நடு இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்த அந்த 50வயது முதியவர்தான். கந்தகாரில் அந்த விமானம் நின்றபோது சுவிஸ்ரலாந்து அரசும் இத்தாலி அரசும் தனது சிறப்பு அதிகாரிகளை இந்தியாவிற்கு அனுப்பி தீவிரவாதிகள் என்ன கேட்டாலும் கொடுத்துவிடுங்கள், எப்படியாவது நாங்கள் அவரை பத்திரமாக மீட்டெடுக்கவேண்டும் அவருக்கு ஏதாவது ஆனால் உலகத்தில் பெறும் நிதிநெருக்கடி ஏற்படும் என்று நெருக்கினார்கள். அன்றைய சுவிஸ் வெளியுறவு அமைச்சர் ஜோசப் தெசி இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந் சிங்கிற்கு தொலைபேசியில் விடாமல் தெந்தரவு செய்தார். அதுமட்டுமல்லாது சிறப்பு அதிகாரி ஹன்ஸ் தலைமையில் ஒரு குழு இந்தியாவிற்கு தனிவிமானத்தில் பறந்து வந்தது. தீவரவாதிகளுடம் சுமூகமாக பேசி இந்தியா சார்பாக ஒரு பெரும் தொகையை அஜித் தோவல் தீவிரவாதிகளுக்கு கொடுத்து அந்த 50வயது முதியவரை மீட்டு சுவிஸ் அதிகாரிகளுடன் அனுப்பி வைத்தார்.

அவ்வளவு முக்கியமான அந்த நபரின் பெயர் ராபட் கியோரி (Robert Giori). உலகத்தில் உள்ள 90% பணத்தை அச்சடித்து தரும் DE LA RUE நிறுவனத்தின் தலைவர். இவரை உலக நிதி நிறுவனங்கள் கரன்சி கிங் (currency king) என்று அழைப்பார்கள். உலகநாடுகளுக்கு தேவைப்படும் பணத்தை அச்சடிப்பது, அச்சு இயந்திரங்களை தயாரிப்பது, அச்சு மை தயாரிப்பது, பணம் அச்சடிக்க பயிற்சி கொடுத்து கைதேர்ந்த ஆட்களை உருவாக்குவது போன்ற பெரும் சாம்ராஜ்யத்தையே நடத்துபவர். உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். உலக பெருமுதலாளிகள் தனது கருப்பு பணத்தை வரிகளற்ற சொர்க்கம் (Tax heaven) என்றழைக்கப்படும் தீவுகளில் பதுக்கி மணி லான்டரிங் (money laundering) செய்வதற்கு உதவி செய்பவர். பல தீவிரவாத அமைப்புகளுக்கு கள்ளநோட்டு அச்சடித்துத் தருபவர், பல நாடுகளை நிதிநெருக்கடியில் தள்ளுவதற்கு துணைநின்றவர். இவ்வளவு பெரிய இந்த ஜாம்பவானை காப்பாற்றுவதற்காக இந்தியா தீவிரவாதிகளின் கோரிக்கைக்கு அன்று தலைவணங்கியது. இந்த ராபட் கியோரியின் நிறுவனமான DE LA RUE கடந்த 100 ஆண்டுகளாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு பணத்தை அச்சடித்து தருகிறது. இந்தியாவிற்கு பணத்தை அச்சடித்துத் தரும் மிகமுக்கியமான நான்கு கம்பெனிகள் UK based De LA Rue, Australia based Innovia, Munich based Giesecke & Devrient and Swiss company Landquart.

இதில் உலக அளவில் பெரும் அதிக்கம் செலுத்தும் கம்பெனி De LA Rue. இந்த De LA Rue கம்பெனியை இந்தியா 2011ம் ஆண்டு தடைசெய்தது. இந்தியா – நேபாள பகுதிகளில் மத்திய புலனாய்வுக் குழு 2009-10 இடைப்பட்ட காலத்தில் 70வதுக்கும் அதிகமான வங்கிக் கிளைகளை சோதனையிட்டபோது 500, 1000 ரூபாய் அடங்கிய பலகோடி கள்ளநோட்டுக்கள் கிடைத்தது. அதைப்பற்றி வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியபோது ரிசர்வ் வங்கிதான் இவற்றை கொடுத்தது என்று தகவல் கொடுத்தனர். அதேபோல் இந்தியா பாகிஸ்தான் இடைப்பட்ட பகுதிகளில் செயல்படும் தீவிரவாதிகளிடத்திலும் கள்ளநோட்டுகள் சிக்கியது. இந்த கள்ளநோட்டுகள் தத்ரூபமாக இந்திய ரிசர்வ் வங்கி அச்சடிப்பதைப் போலவே இருந்தது. இவை அனைத்தையும் கைப்பற்றிய இந்திய புலனாய்வு அமைப்பு ரிசர்வு வங்கியிடம் விளக்கம் கேட்டது. மறைமுக ஒப்பந்தங்கள் மூலமாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு அச்சடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிற விடயத்தை இந்திய புலனாய்வுத் துறை கண்டுபிடித்தது. இந்தியாவின் பொருளாதார இறையாண்மை கேள்விக்குள்ளாகிவிட்டது என்று பத்திரிக்கைள் எழுதின. இதனை தொடர்ந்து பாராளுமன்றக் குழு அமைத்து ரிசர்வ் வங்கியிடமிருந்து உரிய விளக்கத்தை கேட்டறிந்தது. ஏறத்தாள ஒரு லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வெளிநாட்டு கம்பெனிகளிடம் டெண்டர் முறையில் ஒப்பந்தம் கொடுத்து அச்சடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதில் பெரும்பங்கு DE LA RUE கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது. இந்த கம்பெனிகள் கள்ளநோட்டு அடிப்பவர்களுக்கு, தீவிரவாதிகளுக்கு இதுபோன்ற தொழில்நுட்பத்தை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா மட்டுமில்லாமல் பலநாடுகளின் பண அச்சடிப்பு நுட்பத்தை வெளியிட்டது. தரமற்ற காகிதங்களை விற்றது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை இங்கிலாந்து அரசின் SERIOUS FRAUD OFFICE அம்பலப்படுத்தியது. இதனை தொடர்ந்து DE LA RUE கம்பெனி இந்தியாவில் 2011ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. DE LA RUE கம்பெனி தடை செய்யப்படும்போது பண உற்பத்திக்காக வைத்திருந்த 2000 மெட்ரிக் டன் காகிதங்கள் கிடங்கில் எடுக்கமுடியாமல் தடைசெய்யப்பட்டு இருந்தது. இது அந்த கம்பெனிக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியது. அதோடு இந்தியாவின் பண அச்சடிக்கும் ஒப்பந்தம் ரத்தானதாலும் தடை செய்யப்பட்டதாலும் பங்குச்சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. அதனை ஏற்கும் முகமாக DE LA RUE கம்பெனி அப்போதைய CEO ஜெம்ஸ் ஹசி ராஜினாமா செய்தார். இவ்வளவு பெரிய சதியில் ஈடுபட்ட DE LA RUE கம்பெனி KBA GIORI என்று தன் புதுவடிவத்தில் சுவிஸ் நாட்டின் ஆதரவுடன் இந்தியாவில் காய் நகத்தியது. கடந்த சில ஆண்டுகளில் தான்விட்ட லாபத்தை சம்பாதிப்பதற்காக டெல்லியில் உள்ள சில ஏஜென்சிகளுக்கு கமிசன் கொடுத்து ரிசர்வ் வங்கி ஒப்பந்தத்தை 2014ம் ஆண்டு பெற்றது.

2014-16 இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்ட ஒரு கம்பெனிக்கு மோடி அரசு பணம் அச்சடிக்க ரகசிய டெண்டர் கொடுத்தது. DE LA RUE கம்பெனி தடையை குறித்தான ஆவணங்களை அழித்துவிட்டு அந்த கம்பெனியின் தடையை விலக்கி இந்த ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவெளியிலோ பாராளுமன்றத்திலோ இவ்வொப்பந்தம் குறித்து விவாதிக்கப்படவில்லை. நவம்பர் 2015ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து இடையே போடப்பட்ட (UK INDIA DEFENCE & INTERNATIONAL SECURITY PARTNEERSHIP AGREEMENT ) ஒப்பந்தத்தை மையமாக வைத்து மேக்இன் இந்தியா திட்டத்தின் பெயரில் இந்தியாவில் திரும்பவும் தனது ஆதிக்கத்தை துவங்கியது. தடைநீக்கப்பட்ட ஆறு மாதத்தில் DE LA RUE கம்பெனியின் பங்கு 33.33% உயர்ந்தது. மோடியின் தயவால் சர்வதேச சந்தையில் திரும்பவும் கொடி கட்டிப் பறக்கத் துவங்கியது. மோடியின் தயவால் அரசு பத்திரங்கள் அச்சடிக்க மத்திய பிரதேசத்தில் security papers mills என்ற புது கம்பெனியை துவங்க 10 ஏக்கர் நிலம் அவுரங்காபாத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதை சிவசேனா MP ஹெமந் கோட்சே வெளிப்படையாக கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் panama papers எனும் கருப்புபண முதலைகளின் ரகசிய ஆவணம் வெளிவந்த போது DE LA RUE கம்பெனி டெல்லியில் இயங்கும் ஒரு ஏஜென்சிக்கு 15% கமிசன் கொடுத்து ரிசர்வ் வங்கியின் ஒப்பந்தத்தை பெற்றது என்ற விபரம் வெளியானது. அதேபோல் ரிசர்வ் வங்கிக்கு 40மில்லியன் பவுண்டு கொடுக்கப்பட்டதும் அறிக்கைகளில் வாயிலாக வெளிவந்தது. இதனை எதிர்பார்க்காத மோடி அரசு DE LA RUE கம்பெனியை ஏப்ரல் 2016ம் ஆண்டு மீண்டும் தடைசெய்தது. 2016 நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு தடைவிதிப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே 2000 ரூபாய் நோட்டுக்களை உர்ஜித் பட்டேலின் கையெழுத்துடன் DE LA RUE கம்பெனி துணையுடன் அச்சடிக்கத் துவங்கியது. 2016 ஆகஸ்ட் மாதத்தில் 480 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகளும் அதற்கு இணையான 500ரூபாய் நோட்டுகளும் அச்சடித்து முடிக்கப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதில் பா.ஜ.க அரசு DE LA RUE கம்பெனியுடன் சேர்ந்து ஏதோ பெரும் சதித்திட்டத்தல் ஈடுபட்டு பல லட்சம் கோடிகள் ஆதாயம் அடைந்துள்ளது.

இந்த சதித்திட்டத்தை வடிவமைத்து செயல்பட்டதில் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு பெரும்பங்கு இருக்க வேண்டும். இவர்தான் DE LA RUE கம்பெனியின் தலைவர் ராபட் கியோரியை தீவிரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்தவர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அஜித் தோவலின் மகன் விவேக் தோவல் மற்றும் சௌரியா தோவர் வரியில்லா சொர்க்கம் என்றழைக்கப்படும் கேமன்தீவில் GNY ASIA என்ற போலி கம்பெனியை துவங்கி பல்லாயிரம் கோடி பணத்தை அந்நிய முதலீடு என்ற போர்வையில் இந்தியாவிற்குள் கொண்டுவந்து கருப்பை வெள்ளையாக மாற்றி கமிசன் அடித்தனர்.

GNY ASIA கம்பெனியின் இன்னொரு இயக்குனர் டான் டபுள்யூ ஈபாங்ஸ்( Don W Ebanks) இவர் வரி ஏய்ப்பு செய்து பல தீவுகளில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்திருப்பதை பனமா பேப்பர் எனும் ரகசிய ஆவணத்தல் வெளியிட்டது. விவேக் தோவலின்(Vivek Doval) அண்ணன் சௌரியா தோவல் ஜெமினி பினான்சியல் சர்வீசஸ் (Gemini financial services) எனும் நிதிநிறுவனத்தை நடத்திவருகிறார். அதன் மற்ற இரு இயக்குனர்களில் ஒருவர் பாகிஸ்தானி சையத் அலி அப்பாஸ் (Syed Ali Abbas) மற்றொருவர் சவுதி இளம் மன்னர் மிச்சல் ( Prince Mishaal Bin Abdullah Bin Turki Bin Abdullaziz Al-Saud) இவர் ஐஎஸ்ஐஎஸ்(ISIS) தீவிரவாத குழுவிற்கு நிதி உதவி செய்துவருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்து.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நவம்பர் 08,2016இல் மோடி அரசு அறிவிப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் DE LA RUE கம்பெனி துனையுடன் புதிய 2000ரூபாய் நோட்டுகளை அமித் ஷா தலைமையில் இந்திய ஒன்றியத்தில் இருக்கிற பல்வேறு துறைகளை சார்ந்த 26பேர் சேர்ந்து அச்சடித்திருக்கிறார்கள். பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபின் பெரிய பெரிய முதலாளிகளிடமிருந்த கருப்பு பணத்தையெல்லாம் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளில் அச்சடித்த புதிய 2000ரூபாய் நோட்டுகளை 15 இருந்து 45% வரை கமிசன் பெற்றுக்கொண்டு கைமாற்றியுள்ளனர். இப்படியாக குறைந்தபட்சம் 3லட்சம் கோடி பணத்தை கைமாற்றினோமென்று இந்த சதிகளில் முக்கிய பங்காளியாக இருந்த இந்திய உளவுதுறையான ’ரா’(RAW) அமைப்பை சேர்ந்த ராகுல் ராத்னேக்கர் பார்க்க படம் 01 என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

https://www.nationalheraldindia.com/…/randaw-field-assistan…

மேலும் இந்த ஊழலில் இந்திய ஒன்றியத்திலிருக்கிற பல்வேறு துறைகளையும் சட்டத்தை மீறி பயன்படுத்தியிருக்கின்றனர். அதாவது வெளிநாடுகளில் அச்சடித்த பணத்தை இந்திய இராணுவ விமானம் மூலம் டெல்லி எல்லையிலுள்ள ஹிண்டன் என்ற இராணுவ விமான படைதளத்திற்கு கொண்டுவந்து அங்கிருந்து முதலாளிகளுக்கு சப்ளை செய்திருக்கிறார்கள். இதில் உச்சபட்ச மோசடி என்னவென்றால் வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்ட புதிய 2000ரூபாய் நோட்டுகளில் கவர்னர் கையொப்பம் இருக்குமிடத்தில் உர்ஜித் பட்டேல் அவரின் கையெழுத்து இருக்கிறது. ஆனால் அப்போது கவர்னராக இருந்தவர் இராகுராம் ராஜன் ஆவார். உர்ஜித் பட்டேல் பதவியேற்றதே செப்டம்பர் 04,2016அன்றுதான் ஆனால் புதிய நோட்டு அச்சடித்ததாக சொல்லப்படுவது ஏப்ரல் 2016 ஆக ஆறுமாதத்திற்கு முன்பே இராகுராம் ராஜனை தூக்கிவிட்டு அந்த இடத்தில் உர்ஜித் பட்டேலை கொண்டுவரவேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்த மெக ஊழலை செய்திருக்கிறார்கள். அதற்கேற்றார் போல நவம்பர் 08,2016 அன்று புதிய கவர்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அதரவு தெரிவித்தார்.

இப்படி இவ்வளவு பெரிய ஒரு ஊழலை அரசின் அத்துணை துறைகளையும் கையில் போட்டுக்கொண்டு செய்திருக்கிறது பிஜேபியின் மோடி அரசு.

Leave a Reply