கேபிள் டிவி மற்றும் டி.டி.எச்சிலும் மோடிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய திடீர் ’நமோ டிவி’

தனியாக தொலைகாட்சி இல்லாமல் கஷ்டப்படும் கட்சிகளை சேர்ந்தவரா நீங்கள் உங்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது மோடி கும்பல் இந்த அருமையான வாய்ப்பினை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சமீபத்தில் அனைத்து கேபிள் டிவி மற்றும் டி.டி.எச்சிலும் தீடிரென்று ’நமோ டிவி’ என்ற ஒரு புதிய சேனல் ஒளிபரப்பாகிறது. அதில் முழுக்க முழுக்க மோடி மற்றும் அவரது சகாக்கள் தேர்தல் பிரச்சார பரப்புரையின் போது பேசிய உரையினை தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். சரி இந்த தொலைகாட்சிக்கான ஒப்புதல் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையிடம் பெறப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அப்படியிருக்க எப்படி இந்த தொலைகாட்சி அனைத்து டி.டி.எச்சிலும் ஒளிபரப்பப்படுகிறதென்றும் இதற்கான செலவை பிஜேபியின் தேர்தல் செலவோடு சேர்க்கவேண்டுமென்றும் காங்கிரஸ் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் மத்திய அமைச்சகத்துக்கு விளக்கம் கேட்டிருந்தது. அதற்கான பதிலை(!) நேற்று அமைச்சகம் எழுத்து மூலம் சமர்பித்திருக்கிறது. அதில் ”இது டி.டி.எச் ஆப்ரேட்டர்களால் சிறப்பு சேவை வழங்கும் அடிப்படையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனவே இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெறத்தேவையில்லை என்று ஒரு அடடே பதிலை சொல்லியிருக்கிறது.https://theprint.in/india/governance/namo-tv-is-special-channel-rented-by-a-party-doesnt-need-permit-ib-ministry-tells-ec/217520/amp/?fbclid=IwAR1Ia5-shmRLLL6B4B-5SFJMtDd-U4A1P2qPgwnxO5TsGgYa2jf1rYiCVpo ஆக தொலைகாட்சி இல்லாத சிறு சிறு கட்சிகள் இயக்கங்கள் டி.டி,எச் ஆப்ரேட்டர்களை பிடித்து சிறப்பு சேவை மூலம் மிக எளிதாக உங்களுக்கான தொலைகாட்சியினை தொடங்கிக்கொள்ளலாம்.

இந்த ஆபர் மோடி ஆட்சியிலிருந்து அகற்றப்படும் மே 23தேதி வரை தான். உடனே முந்துங்கள் போனவராது பொழுது போன கிடைக்காது..

மே 17 இயக்கம்
9884072010

 

Leave a Reply